வெள்ளிக்கிழமை பூஜை அறையில் இதை செய்து பாருங்க..!!
வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது வழக்கம்.., ஆனால் எப்படி பட்ட பூஜைகள் செய்தால் வீட்டில் லக்ஷ்மி கலாக்ஷம் வரும் என்று உங்களுக்கு தெரியுமா…?
வீட்டில் லக்ஷ்மி கலாக்ஷம் பெறுக வெள்ளிக்கிழமை காலை அன்று.., பூஜை சாமான் சுத்தம் செய்து வழிபடுவது பலன் தரும் அதுவே.., இப்படி செய்தால் இன்னும் சிறந்த பலன் தரும்.
வியாழன் கிழமை அன்றே பூஜை அறை மற்றும் பூஜை சாமான்கள் துளக்கி மஞ்சள் குங்குமம் இட்டு வைக்க வேண்டும்..,
ஒரு சிலருக்கு வியாழன் கிழமை அன்று அசைவம் சாப்பிடும் பழக்கம் இருக்கும், அவர்கள் அசைவ உணவு சாப்பிடும் முன் பூஜை அறையை சுத்தம் செய்யலாம்.
உங்கள் வீட்டில் அன்னபூரணி சிலை அல்லது புகைப்படம் இருந்தால், அன்னபூரணி அம்மன் சிலை அல்லது புகைப்படம் முன் ஒரு குட்டி பாத்திரத்தில் பச்சரிசி மற்றும் காசு வைத்து வணங்கலாம்.
இதனால் வீட்டில் அன்னம் குறையாமல் இருக்கும், பணம் வரவும் அதிகரிக்கும்.
ஒரு பானையில் பூஜை அறையில் சாமிக்கு தண்ணீர் வைக்க வேண்டும்.., காரணம் வீட்டில் இருக்கும் இஷ்ட தெய்வம் இரவு வேலையில் நம் இல்லத்திற்கு வருவார்க்கலாம், அந்த வேலையில் தண்ணீர் கூட இல்லை என்றால் மீண்டும் நம் இல்லம் தேடி நம் இஷ்ட தெய்வங்கள் வருவது கஷ்டம் என்று சொல்லுவார்கள்.
விளக்கு ஏற்றும் தீபத்தில் எண்ணெய் அல்லது விளக்கை குறையாமல் ஊற்ற வேண்டும்,
பூஜைக்கு முன் அம்மன் படங்களுக்கு வாசனை நிறைந்த மலர்களால்.., பூக்கள் வைக்க வேண்டும். அது சிறந்த மணத்தை தருவதோடு மன அழுத்தத்தையும் குறைக்கும்.
வீட்டின் வாசப்படியில் அகல் விளக்கால் விளக்கு ஏற்ற வேண்டும்.
வீட்டு வாசப்படியில் அகல் விளக்கு வைத்து விளக்கு ஏற்றுவது, வீட்டில் தெய்வத்தை தங்க வைப்பதோடு தீய சக்திகளை வீட்டில் வர விடாது.
வீடு முழுவதும் காலையில் மஞ்சள் தண்ணீர் தெளிக்க வேண்டும். மஞ்சள் கிருமிகளை அகற்றுவதோடு நோய்கள் வராமல் பார்த்துக்கொள்ளும்.
நீங்கள் வீட்டிலேயே குல தெய்வம் வைத்திருந்தால், காலை மற்றும் மாலை விளக்கு ஏற்றி பக்தி பாடல்கள் கேட்டு வழிபடலாம்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
Discussion about this post