துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!! பதவியில் கொடுக்கப்பட்ட அந்தஸ்து..!!
இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து உதயநிதியை துணை முதலமைச்சராக நியமிப்பதற்கான அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியானது..
நேற்று ஆளுநர் மாளிகையில் அமைச்சர்கள் பேசியதாவது., துணை முதலமைச்சர் பதவி என்பது இந்திய அரசியலமைப்பு ரீதியான பதவி மட்டும் கிடையாது., அந்த பதவியில் பொறுபேற்க அதுகுறித்த அறிவிப்புகள் வெளியாக வேண்டும்.. இது முழுவதும் அமைச்சர்கள் அளித்த ஒப்புதல் மூலம் உதயநிதி அவர்களுக்கு துணை முதலமைச்சர் பதாவி கொடுக்கபட்டுள்ளதே தவிர ஆளுநர் பதவி ஏற்பு செய்துவைக்க தேவையில்லை. அதாவது அரசு அறிவிப்பு மட்டுமே போதுமானது.
அதேசமயம் ஒரு துணை முதலமைச்சருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டால்., அவருக்கு கீழ் பணியாற்ற செயலாளர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.. அந்த செயலாளர் பதவிக்கு கூடுதல் தலைமைச் செயலாளர்கள் பொறுப்பில் இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், முதன்மைச் செயலாளர்களாக பதவி வகிக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரும் லாபி செய்யத் தொடங்கி இருக்கிறார்கள்.
இவர்களை நியமனம் செய்வது முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் அட்வைஸராக இருக்க வேண்டும்., அதிலும் பணி ஓய்வு பெற்றுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தேர்வு செய்யும் நபர்களே ஆலோசகராக இருக்கிறார்கள்.., ஆனால் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவருக்கு கீழ் பணியாற்றும் செயலாளர்களை அவரே நியமனம் செய்ய திட்டமிடுள்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது
ஒரு துணை முதலமைச்சர் என்பவர் கேபினட் இலாகாவை வைத்திருக்க வேண்டும். ஆனால் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கோளும் சமயத்தில் தமிகத்தில் எடுக்க வேண்டிய சியா முகய் பொருப்புகளை உதயநிதி ஸ்டாலின் மேற்கொள்வார்..
பொதுவாக துணை முதல்வர் பதவி என்பது.. முதல்வருக்கு துணையான பதவிதான். ஒரு முதலமைச்சர் இல்லாத நேரங்களில் அவரின் முடிவுகளை எடுக்கும் பவர் துணை முதலமைச்சர் மேற்கொள்வார்., குறிப்பாக அமைச்சரவை கூட்டங்களை நடத்த கூட முடியும்.
அதேபோல் முதல்வர் இருக்கும் போதே முதல்வரின் உத்தரவின் பெயரில் துணை முதல்வர் கூட்டங்களை நடத்த முடியும். ஆலோசனைகளை மேற்கொள்ள முடியும். அதேபோல் முதல்வர் இருக்கும் போதே முதல்வரின் அனுமதியுடன் உள்துறை தொடர்பான முடிவுகளை எடுக்க முடியும். துணை முதல்வர் பதவி என்பது அரசியலமைப்பு ரீதியான பதவி கிடையாது. இதனால் துணை முதல்வர் என்கிற அந்தஸ்தை உதயநிதி பெறுகிற போது அது குறித்து அறிவிப்பு மட்டுமே நேற்று வெளியிடப்பட்டது, மாறாக அவர் பதவி ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.