ஹிஸ்புல்லா துணை தளபதி நபில் கவுக் இஸ்ரேல் தாக்குதலில் உயிர் இழப்பு..!! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை..!!
இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா பலியானதை தொடர்ந்து இஸ்ரேலின் அடுத்த தலைவராக இருந்த துணை தளபதி நபில் கவுக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் இஸ்ரேலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது…
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் தொடங்கியது.. தற்போது வரை போர் நீடித்து வரும் நிலையில் கடந்த ஒரு வருடத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் இந்த தாக்குதலில் உயிர் இழந்துள்ளனர்..
காசாவில் பெரும்பாலான நகரங்களில் இஸ்ரேல் தாக்குதலை நடத்தி இருப்பதால் லட்சம் கணக்கான மக்கள் காசாவை விட்டு இடம் பெயர்ந்துள்ளனர்..
பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு லெபானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இஸ்ரேல் மீது ஏவுகணைகளை தாக்குதலை நடத்தியது.. இந்த தாக்குதலை தீவிரப்படுத்தும் விதமாக இஸ்ரேல் அமைப்பானது வாக்கி டாக்கிகள், பேஜர்கள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை வெடிக்க செய்து., மின் இணைப்பு துண்டிப்பு மற்றும் இணையதள சேவைகள் முடக்கம்.. என இஸ்ரேல் செய்தது..
கடந்த 2 வாரங்களில் மட்டும் இஸ்ரேல் நடத்திய இந்த குண்டு தாக்குதலில் லெபனானில் 1030 பேர் உயிர் இழந்துள்ளனர். அதன்பின்னர் ஹிஸ்புல்லா அமைப்பின் முகாம்கள், ஆயுத கிடங்குகள் உள்ளிட்டவைகள் மீதும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
ஹிஸ்புல்லாவின் தலைமை அலுவலகமாக செயல்பட்டு வரும் தஹியே அடுக்குமாடி கட்டிடத்தின் மீது கடந்த 20ம் தேதி இஸ்ரேல் குண்டு வீசியது அதில் கட்டிடத்தின் ரகசிய அறையில் இருந்த ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.. அதனை இஸ்ரேல் இராணுவம் கடந்த செப்டம்பர் 28ம் தேதி அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.. அதனை ஹிஸ்புல்லா அமைப்பும் உறுதி செய்தது..
கடந்த 27ம் தேதி நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் தென் பகுதி தளபதி அலி கார்க்கி உட்பட 20க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யபட்டிருப்பதாக இஸ்ரேல் ராணுவம் செப்டம்பர் 28ம் தேதி அறிவித்தது. இந்த தாக்குதலில் ஹமாஸின் மூத்த தளபதியான அலி கார்க்கியும் உயிர் இழந்துள்ளார்.. என்பதை ஹிஸ்புல்லா அமைப்பு உறுதி செய்துள்ளது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் துணை தளபதி நபில் கவுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் நேற்று அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டிருந்தது.. ஆனால் அவர் எந்த இடத்தில் கொலை செய்யபட்டுள்ளார் என்பது பற்றிய எந்த ஒரு தகவலையும் இஸ்ரேல் வெளியிடவில்லை இதுகுறித்து ஹிஸ்புல்லா அமைப்பு எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
ஹசன் நஸ்ரல்லா உயிர் இழந்ததை தொடர்ந்து ஹிஸ்புல்லா அமைப்பின் அடுத்த தலைவர் யார் என்ற விவாதம் நடந்த போது., நபில் கவுக் பெயர் இடம்பெற்றது., இவர், ஹிஸ்புல்லா அமைப்பின் மத்திய கவுன்சிலின் துணை தலைவராக பதவி வகித்து வந்த நிலையில் இஸ்ரேல் தாக்குதலில் நபில் கவுக் கொலை செய்யபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது..
இதற்கிடையே, லெபனான் மீது இஸ்ரேல் நேற்று தொடர்ந்து போர் விமானங்கள் மூலம் குண்டு மழை பொழிந்தது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 33 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் தாக்குதலால் 2லட்சத்து 50 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளை காலி செய்து விட்டு முகாம்களில் தங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..