அசத்தலான டேஸ்டில் மட்டன் குருமா..!! அதிக ருசி கொண்டது..!
தேவையான பொருட்கள்:
-
மட்டன் – 1/2 கிலோ
-
தயிர் – 1 கப்
-
இஞ்சி பூண்டு விழுது – 3 ஸ்பூன்
-
வெங்காயம் – 1 கப்
-
கரம் மசாலா – 1 ஸ்பூன்
-
எண்ணெய் – தேவையான அளவு
-
சிவப்பு மிளகாய்பொடி – 2 ஸ்பூன்
-
பிரியாணி இலை – 2
-
ஏலக்காய் – 2
-
பட்டை – 2
-
கிராம்பு – 6
செய்முறை:
-
மட்டனை நன்றாக சுத்தம் செய்த பின் அதை குக்கரில் மாற்றி அதில் இஞ்சி பூண்டு விழுது, தயிர், மிள்காய் தூள், கரம் மசாலா மற்றும் உப்பு, தண்ணீர் நன்றாக வேக வைக்க வேண்டும்.
-
பின் அதை இறக்கி வைத்துவிட்டு, ஒரு வாணலை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி மசாலா வகைகளை போட்டு பொறித்துக் கொள்ள வேண்டும்.
-
பின் அதில் வேகவைத்த மட்டனை சேர்த்து வதக்கி அதில் காரத்தை பார்த்து ஒருவேளை பற்றவில்லை எனில் இப்போதே தேவையானதை போட்டு சற்று கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான மட்டன் குருமா தயார்.
-
அவ்ளோதான் சுவையான மட்டன் குருமானை சாதம், இட்லி, தோசை. சப்பாத்தி, பரோட்டா ஆகியவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
