புதினா சட்னி..!
எண்ணெய் – 2 தேக்கரண்டி
கடலை பருப்பு – 2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 2 தேக்கரண்டி
பூண்டு – 5 பற்கள்
இஞ்சி – 1 துண்டு நறுக்கியது
புளி
சிவப்பு மிளகாய் – 5
தேங்காய் – 1/2 கப்
கறிவேப்பிலை – 1/2 கப்
புதினா இலை – 2 கட்டு
கல் உப்பு – 1 தேக்கரண்டி
பெருங்காய தூள் – 1/4 தேக்கரண்டி
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் – 1
கறிவேப்பிலை
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடலை பருப்பு,உளுத்தம் பருப்பு,பூண்டு,இஞ்சி,புளி,மிளகாய் மற்றும் தேங்காய் துண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
பின் அதில் கறிவேப்பிலை,புதினா இலைகளை சேர்த்து வதக்க வேண்டும்.
உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி ஆறவைக்க வேண்டும்.
ஒரு மிக்ஸியில் நீர் சேர்த்து வதக்கிய கலவையை அரைத்துக் கொள்ளவும்.
தாளிக்க ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து கடுகு,உளுந்து,சீரகம் சேர்த்து பொரிந்ததும் அதனை சட்னியில் ஊற்றவும்.
அவ்வளவுதான் புதினா சட்னி தயார்.