உயிரிழந்த பாட்டியின் சாம்பலை பாஸ்தாவில் கலந்து சாப்பிட்ட பெண்… அதிர்ச்சி சம்பவம்…!
ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவரின் பாட்டி கடந்த வருடம் இறந்து போய் உள்ளார். அந்த பாட்டியின் உடலை எரித்து சாம்பலாக்கியபின் இருக்கும் மிச்ச சாம்பலை அந்த பெண் வீட்டில் வைத்திருந்தார்.
ஒரு நாள் குடும்பத்தில் உள்ள அவரது தாய் மற்றும் தம்பி ஆகியோர் பாட்டியை நினைத்து வருந்திக் கொண்டிருந்தார்களாம் அதனால் அவர்களுக்கு அந்த பெண் சமைக்கும் போது செய்த பாஸ்தாவில் அவருடைய பாட்டியின் சாம்பலை போட்டு சமைத்து அவர்களுக்கு கொடுத்தார்களாம். மேலும் அந்த பெண்ணும் அந்த சாம்பலை உண்டு இருக்கிறாராம்.
ADVERTISEMENT
கேட்டால் அவர்கள் பாட்டியை நினைத்து கஷ்டப்பட்டதாகவும், பாட்டியின் சாம்பல் அவர்களுக்கு ஆறுதலாகவும் அவர்களுக்கு மன தைரியத்தை தரும் என்பதற்காகவும் அவர்களுக்கு அந்த சாம்பலை கலந்துகொடுத்தாக கூறியுள்ளார்.
மேலும் அந்த பெண் தனது தம்பியுடன் சிறு வயதில் இருந்தே வாழ்ந்தது இல்லை எனவும் இப்போது தான் அவனுடன் சேர்ந்து வாழ்வதாகவும் எனவே அக்க தம்பிக்குள் நடக்கும் விளையாட்டு போல என் தம்பியை ப்ராங்க் செய்ததாகவும் சிரித்துக் கொண்டே ஆச்சரியமூட்டும் பதிலை கூறுகிறார். ஜாலிக்காக இதை செய்ததாக சொல்லிருக்கிறார்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.