5 அணிகள் பங்கேற்றுள்ள முதல் மகளிர் பிரிமீயர் லீக் டி.20 தொடர் மும்பையில் நடந்து வருகிறது. இதில் பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 10வது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ்- உ.பி. வாரியர்ஸ் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த உ.பி. வாரியர்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன் எடுத்தது. பின்னர் களம் இறங்கிய மும்பை அணியில் 17.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 164 ரன் எடுத்த மும்பை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் மெக் லானிங் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
முன்னதாக இரு அணிகளும் நேருக்கு நேர் சந்தித்ததில் மெக் லானிங் தலைமையிலான அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி கேப்பிட்டல்ஸ் இந்த மோதலுக்கு குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஸ்மிருதி மந்தனா தலைமையிலான அணி இதுவரை விளையாடிய நான்கு ஆட்டங்களிலும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.