விசிக தலைவர் தொல். திருமாவளவனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் இன்று(ஆக. 17) தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் மு.க ஸ்டாலினும் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில்:
‘இம்மண்ணில் ஆழ விதைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் – புரட்சியாளர் அம்பேத்கர் கருத்துகளைத் தனது பேச்சாலும் செயல்களாலும் வளப்படுத்திடும் அன்புச் சகோதரர் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!’ என்று பதிவிட்டுள்ளார்.