சிங்கப்பூர் பூங்காவிற்கு நிகராக வரும் கலைஞர் நூற்றாண்டு பூங்கா..!
சென்னை செம்மொழி பூங்கா அருகே கதீட்ரல் சாலையில் 6.09 ஏக்கர் பரப்பளவில், ரூ. 25 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை சிங்கப்பூரில் உள்ள பூங்காக்களின் வடிவத்தில், அமைக்க உள்ளார் முதலமைச்சர்.
ஆகஸ்ட் 15ம் தேதி கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தி விட்டு, அந்த விழாவில் பேச தொடங்கினார், ”சென்னை கத்தீட்ரல் சாலையில் உள்ள செம்மொழி பூங்காவுக்கு அருகே 6.9 ஏக்கர் நிலத்தில் ரூ. 25 கோடி மதிப்பில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்படும் என கூறினார்.
மேலும் சிங்கப்பூர் பூங்கா வடிவில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. பூங்கா அமைக்கும் வேலைகள் முடிந்த பின் அதன் சிறப்பு அம்சங்கள் பற்றி வெளியிடப்படும்.
செம்மொழி பூங்காவுக்கு அருகே தான் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்க உள்ளோம். செம்மொழி பூங்காவையும் கலைஞர் நூற்றாண்டு பூங்காவையும் இணைக்க பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைப்பதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது, எனவும் அவர் கூறினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..