இமாச்சலில் அகோர மண்சரிவு..!! உயிர் பிரிந்த நிலையில் 71 பேர் உடல் மீட்பு..!
கடந்த ஞாயிற்றுகிழமை தொடங்கிய கனமழையால் மாநில முழுவதும் பல இடங்களில் சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது, இதனால் சம்மர் ஹில், கிருஷ்ணா நகர், மற்றும் பாக்லி பகுதிகளில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலச்சரிவில் பெரும்பாலான மக்கள் சிக்கியுள்ளனர், இடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது. சிம்லா உட்பட 17 மாவட்டங்களில் நிலச்சரிவு அதிகரித்துள்ளது. இந்த நிலச்சரிவு சிம்லா உட்பட 17 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ளது. அதிலும் மிக முக்கியமாக மாண்டி மாவட்டம் அதிக சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இமாசலில் இந்த பேரிடர் தான் மிக பெரிய பேரிடர் என்பது குறிப்பிட தக்கது.
இதுவரை சிம்லாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 57யின் பேர் உடல்கள் மீட்கப்பட்டு இருப்பதாகவும்.., மீட்கப்பட்ட அனைவரும் மண்ணோடு மண்ணாக மீட்கப்பட்டு இருப்பதால் இன்னும் உயிர் சேதம் அதிகமாக இருக்ககூடும் எனவும் மீட்பு பணியினர் தெரிவித்துள்ளனர்.
இந்த இக்கட்டமான சூழலை கருத்தில் கொண்ட அம்மாவட்ட ஆட்சியர்.., சிம்லா உட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது.
இதுகுறித்து இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர்சிங் சுக்கு கூறியதாவது, நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இமாச்சல பிரதேசத்தில் பெய்த கனமழையால் சுமார் ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் இது போன்ற பேரழிவு இதற்கு முன் ஏற்பட்டதே இல்லை. இந்த பாதிப்புகளை சரி செய்ய ஓராண்டு ஆண்டு ஆகும். என அவர் கூறினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..