சினிமா டூ அரசியல் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்து வந்த பாதை..!!
தமிழ்நாடு துணை முதலைமைச்சராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றதை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்.. அதே சமயம் எதிர்கட்சி தலைவர்கள் தங்கடளுடைய விமர்சனங்களை எழுப்பியுள்ளனர்..
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சினிமா முதல் அரசியல் கடந்து வந்த பாதை பற்றி ஒரு சிறுதொகுப்பாக படிக்கலாம்.
உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அரசியல் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னர், படங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் தனது முகத்தினை நன்கு பதிய வைத்தவர்.. ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மாமன்னன் படம் வரை எல்லாம் படங்களும் ஹிட் என சொல்லலாம்.. நகைச்சுவை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் மாமன்னன் படத்தின் மூலம் அரசியலை புரியவைத்தவர்.. திரைப்படங்களில் கதாநாயகனாக அறிமுகமான பின்னரே இவர் முதலமைச்சரின் மகன் என பலராலும் அறியப்பட்டார்..
அதையடுத்து கடந்த 2019ம் ஆண்டு மக்களவைப் பொதுத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.. அந்தத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு உதயநிதியின் பிரச்சாரமும் ஒரு காரணம் என அவருக்கு கட்சியில் இளைஞர் அணிச் செயலாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டது.
பின்னர் 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து, திமுக அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள் உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனால் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவையில் உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின்., இளைஞர்களுக்கான புது விளையாட்டு மையம்., பார்முலா கார் பந்தயம் உட்பட பல்வேறு நலத்திட்டங்களை செய்தார்..,
கட்சிக்காகவும் மக்களுக்காகவும் இவர் செய்த தொண்டை பார்த்து கட்சியின் மூத்த அமைச்சர்கள் வைத்த கோரிக்கையின் படி இன்று துணை முதலமைச்சராக பதவி ஏற்றார்..
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் தமிழ்நாடு துணை முதலமைச்சராக 655 நாட்களில் பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின்க்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் “உங்களின் வளர்ச்சியைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ்நாடு மக்கள் மீது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும் சத்தியம் செய்து பொறுப்பேற்றுள்ளீர்கள். அதன்படி செயல்படுவீர்கள் என நம்புகின்றேன்” எனக் கூறியுள்ளார்.
– கவி பிரியா
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..