போதைப் பொருள் இல்லா சமுதாயம்..!! ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு..! எம்.பி.ஜோதிமணி பேட்டி..!!
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்பது தேர்தல் நேரத்தில் பேச வேண்டிய விஷயம், உரிய நேரத்தில் அது குறித்து பேசுவோம் என கரூரில் எம்.பி ஜோதிமணி பேட்டி.
கரூரில் சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் 286 நபர்களுக்கு 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் ஜோ.அருண் இன்று காலை வழங்கினார். இந்த கூடரங்கானது கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையக்குழு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடந்த கூட்டத்தில், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, கரூர் மாநகராட்சி ஆணையர் சுதா உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் ஜோ.அருண் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 286 பயனாளிகளுக்கு ரூ. 38 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம், பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயின் பிரிவை சேர்ந்த மதம் மற்றும் மொழிவாரியான சிறுபான்மையினர்களின் நலன்களை பேணி காக்கவும், அவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும், 1989ம் ஆண்டில் அமைக்கப்பட்டது.
இந்த ஆணையம் சிறுபான்மையினரின் பிரச்னைகளை கண்டறியும் பொருட்டு மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளை பார்வையிட்டு நலத்திட்டங்களை திறம்பட செயல்படுத்திட, அரசுக்கு தக்க பரிந்துரைகளை செய்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பின், சிறு சிறுபான்மையினருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்துள்ளார் என்றார்.
கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி ஜோதிமணி, காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்பது தேர்தல் நேரத்தில் பேச வேண்டிய விஷயம் என்பதை நினைக்கிறோம். உரிய நேரத்தில் கூட்டணி குறித்து பேசும்போது மற்ற விசயங்களை பேசுவோம்.
அனைத்து அரசியல் கட்சிகளுமே ஆட்சிக்கு வர வேண்டும் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று விரும்புவார்கள். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி இல்லை என்றாலும், ஸ்டாலின் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார்.
விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் இந்தியா கூட்டணியை சேர்ந்த அனைத்து கட்சிகளும் பங்கேற்க இருக்கிறோம். மதுவிலக்கு நிலைப்பாட்டை பொருத்தவரை யாருக்கும் இரு வேறு கருத்து கிடையாது. அனைத்து கட்சியினருமே மதுவிலக்கு வேண்டுமென்றே விரும்புகிறார்கள் மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும். மது உட்பட அனைத்து விதமான போதைப் பொருட்களும் இல்லாத சமுதாயத்தையே நாம் விரும்புகிறோம் என்றார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..