“தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக அயராது உழைப்போம்” துணைமுதலமைச்சராக பொறுப்பேற்றார் உதயநிதி ஸ்டாலின்..!!
துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ள “உதயநிதி ஸ்டாலின்” அவர்களுக்கு நாடாளுமன்ற எம்.பி கனிமொழி., மற்றும் மக்கள் நீதி மையம் கட்சி கமலஹாசன்., தொல்.திருமாவளவன் என அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்..
தமிழக அமைச்சரவையில் இன்று மாற்றம் செய்யபடும் என நேற்று இரவே ஒரு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டு இருந்தது.. அந்த அறிவிப்பின் படி தமிழக அமைச்சரவையில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது..
சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று தமிழகத்தின் புதிய துணை முதலமைச்சராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார்.. இந்த விழாவில் அமைச்சர் துரைமுருகன்., கே.என்.நேரு, தங்கம் தென்னரசு., மதிமுக பொதுச்செயலாளர் வைகோ., நாடாளுமன்ற எம்.பி தயாநிதிமாறன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்..
மற்றும் முன்னால் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு மீண்டும் அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டுள்ளது.. அமைச்சர் செந்தில் பாலாஜியை தவிர இதர அமைச்சர்கள் நான்கு பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதை தொடர்ந்து ஆறு பேருக்கு இலக்காக்கள் மாற்றம் செய்யப்படுள்ளது.
இதனை திமுக தொண்டர்கள் அனைவரும் மாவட்டம் முழுவதும் பட்டாசுக்கள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்..
துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றதை தொடர்ந்து தன்னுடைய தாத்தாவும் திமுகவின் மூத்த தலைவருமான முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிஐடி காலனியில் உள்ள இல்லத்திற்கு சென்று அவரின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார்..
சொல்லாகவும் – செயலாகவும் – உணர்வாகவும் இருந்து வழிநடத்தும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வழியில் – நம் முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலில் தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக அயராது உழைப்போம் என உறுதிமொழி ஏற்றார்..
அதன் பின்னர் தன்னுடைய அத்தையும் தூத்துக்குடியின் நாடாளுமன்ற எம்.பி.யுமான கனிமொழி அவர்களை சந்தித்து வாழ்த்துகளை பெற்றார்.. இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது..
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் திராவிட மாடல் அரசின் அண்ணன்கள் ஆவடி நாசர்., செந்தில் பாலாஜி., சேலம் ஆர்.ஆர்.இராஜேந்திரன்., மற்றும் செழியன் ஆகியோர் மாண்புமிகு அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளோம்.. அமைச்சர்களாக பொறுப்பேற்றிருக்கும் அவர்களின் பணிகள் சிறக்கட்டும். என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார்..
துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள அன்பு இளவல் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், புதிதாகப் பதவியேற்கவுள்ள அமைச்சர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்,” என பதிவிட்டுள்ளார்..
அதேபோல் மக்கள் நீதி மையத்தின் தலைவரும் நடிகருமான கமலஹாசன்., துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள கமலஹாசன் அவர்களுக்கு துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள அன்பு தம்பி உதயநிதி அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்…
துணை முதலமைச்சராக பதவி ஏற்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!! 5 புதிய அமைச்சர்கள் பதவி மாற்றம்…!!!
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..