சுவையான வெந்தயக்கீரை சிக்கன் மசாலா ரெசிபி..!
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இப்போ நாம்ம சிக்கன் மற்றும் வெந்தயக்கீரை வைத்து சத்தான சைடு டிஷ் செய்யலாம் வாங்க..
தேவையான பொருட்கள்:
- எலும்பில்லா சிக்கன் 500 கிராம்
- வெங்காயம் 200 கிராம்
- தக்காளி 2
- வெந்தயக்கீரை 150 கிராம்
- இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
- மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
- பச்சை மிளகாய் 2
- மிளகுத்தூள் 1/2 ஸ்பூன்
- சீரகத்தூள் 1/2 ஸ்பூன்
- கரம் மசாலாத்தூள் 1 ஸ்பூன்
- பட்டை 1
- கொத்தமல்லி இலை சிறிது
- எண்ணெய் 4 ஸ்பூன்
- உப்பு தேவையானது
- தண்ணீர் தேவையானது
ஊறவைக்க தேவையானது:
- மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்
- உப்பு தேவையானது
செய்முறை:
- சிக்கனை சுத்தமாக கழுவி நீரில் அலசிக் கொள்ள வேண்டும்.
- ஒரு பாத்திரத்தில் சிக்கனை சேர்த்து அதில் ஊறவைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து நன்றாக கலந்து சிக்கனை இரண்டு மணி நேரத்திற்கு ஊறவைக்க வேண்டும்.
- கீரைகளை கில்லிக் கொள்ளவும்.
- வெங்காயம், தக்காளி மற்றும் கொத்தமல்லி இலைகளை நறுக்கிக் கொள்ள வேண்டும்.
- ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
- பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.
- அடுத்ததாக மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
- பின் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.
- அடுத்ததாக ஊறவைத்த சிக்கனை சேர்த்து வதக்க வேண்டும்.
- பின் சிறிது எண்ணெய் மற்றும் வெந்தயக்கீரை சேர்த்து வதக்க வேண்டும்.
- கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
- கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்க வேண்டும்.
- அவ்வளவுதான் சுவையான வெந்தயக்கீரை சிக்கன் மசாலா தயார்.