குழந்தைகளுக்கு மாம்பழம் கொடுக்கலாமா..?
குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் சவால் நிறைந்த ஒன்று.., எந்த எந்த வகையான உணவுகள் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்பதில் அனைவரும் பார்த்து பார்த்துகொடுக்க வேண்டும்.
குழந்தை பராமரிப்பில் இன்று நாம் பார்க்க இருப்பது.., குழந்தைக்கு மாம்பழம் கொடுக்கலாமா வேண்டாமா என்பது பற்றி தான்.
மாம்பழங்கள் இயற்கையாகவே இனிப்பு தன்மை நிறைந்தது, அதில் இருக்கும் கார்போஹைட்ரேட் குழந்தைக்கு நாள் முழுவதும் உற்சாகத்தை கொடுக்கும்.
குழந்தைகளுக்கு ஆறுமாதம் வரை கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். எனவே 8 மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு சத்து நிறைந்த உணவு பொருள்களை தர தொடங்கலாம்.
அதாவது கொடுக்கும் உணவை நன்கு மசித்து கொடுக்க வேண்டும்.
* மாம்பழம் குழந்தைக்களுக்கு கொடுக்கும் முன் அவை ஒவ்வாமை நிறைந்தவையா என்று அறிந்து கொடுக்க வேண்டும். மாம்பழத்தை பழமாக வெட்டி கொடுப்பதை விட, குழந்தைகளுக்கு ஜூஸாக கொடுக்கலாம்.
* மாம்பழத்தில் இருக்கும் நார்ச்சத்து, செரிமானத்திற்கு உதவும், என்சைம் குடல் இயக்கத்திற்கு உதவுவதால் மலசிக்கல் ஏற்படாது.
* மாம்பழத்தில் இருக்கும் வைட்டமின் ஏ, கண் வறட்சி, கண் எரிச்சல் மற்றும் மாலைக்கண் நோய் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.
* குளுட்டமைன் ஆசிட் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும்.
* ரத்த செல்களை அதிகரித்து, ரத்த சோகை நோய் ஏற்படாமல் தடுக்கும்.
மேலும் இதுபோன்ற பல குழந்தைகள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
Discussion about this post