மருத்துவ குணம் நிறைந்த கற்பூரவல்லி இலை பஜ்ஜி செய்வது எப்படி..?
- கற்பூரவல்லி இலைகள் – 10-15
- கடலை மாவு – 1 கப்
- மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
- மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
- பெருங்காயத் தூள் – 1/4 தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
கற்பூரவல்லி இலையை நன்றாக சுத்தம் செய்து அதன் மீதுள்ள ஈரத்தை ஒரு துணியால் துடைத்து எடுக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் கடலைமாவு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், பெருங்காயத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
இதற்கிடையில் ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
பின் ஒவ்வொரு இலைகளாக மாவில் போட்டு கலந்து பின் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது ஆரோக்கியமான மருத்துவ குணம் நிறைந்த கற்பூரவல்லி இலை பஜ்ஜி தயார்.
