உங்க உடம்பில் கொழுப்புகள் இருக்கா..!
நமது உடலில் பொதுவாக இரண்டு கொழுப்புகள் இருக்கும். அவை கெட்ட கொழுப்புகள் நல்ல கொழுப்புகள் ஆகும். உடல் ஆரோக்கியத்திற்கு கொழுப்புகள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் கெட்ட கொழுப்புகள் அதிகமானால் ஆபத்தான நோய்கள் வர வாய்ப்புகள் அதிகம்.
கெட்ட கொழுப்புகள் இதயத்தில் ரத்த அடைப்பை ஏற்படுத்தும். நாம் நம் உடலில் உள்ள கொழுப்புகளை கட்டுப்படுத்தவில்லை என்றால், பல நோய்களுக்கு காரணமாக அமைந்து விடும். தவறான உணவு பழக்கம் அதிகமாக இருந்தால் கெட்ட கொழுப்புகள் அதிகமாகும் கொழுப்புச்சத்து குறைந்த பொருட்களையே உண்ண வேண்டும்.
எடுத்துக்காட்டாக பாலில் ஏராளமான கொழுப்புகள் உள்ளது . நம் உயரத்தை விட எடை அதிகமாக இருந்தால் அப்பொழுது கொழுப்புகள் அதிகமாக உருவாவதற்கான வாய்ப்புகள் இருக்கும்.
இன்றைய காலகட்டத்தில் உடற்பயிற்சி என்பது மிகவும் முக்கியமான ஒன்று நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நாம் தவறாமல் அதை கடைபிடிக்க வேண்டும். உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாமல் இருந்தாலும் நடை பயிற்சியாவது மேற்கொள்ள வேண்டும்.
நமது வீட்டு மாடியிலேயே முடிந்தவரை பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இது நம் உடலின் மொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும். தினமும் உடற்பயிற்சி செய்தால் நம் உடலில் நல்ல கொழுப்புகள் அளவை அதிகரிக்கலாம்.
பொதுவாக ஆண்கள் அதிகம் புகை பிடித்தல் மது அருந்துதல் போன்ற கெட்ட பழக்கத்திற்கு அடிமையாக இருப்பார்கள். அந்த வகையில் அது புற்றுநோய், இதய நோயை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இதை தவிர்த்து கெட்ட கொழுப்புகளையும் அதிகரிக்க செய்யும்.
கொழுப்புகள் என்பது முன்பெல்லாம் நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்களிடையே காணப்படும். ஆனால் தற்போது சிறுவயது இளைஞர்களுக்குகொழுப்புகள் அதிக அளவில் வருகிறது.
கொழுப்புகள் தவிர்க்க வழிமுறைகள் :
1. எண்ணை இல்லாத பொருட்களை உண்பது நல்லது
2. பால் புரதச்சத்து அதிகம் உள்ள பொருட்களையும் குறைவாக உண்பது நல்லது
3. அசைவ உணவுகளில் அதிகம்கொழுப்புகள்உள்ள அசைவத்தை சாப்பிடுவதை தவிப்பது நல்லது
4. தினமும் ஒரு டம்ளர் காலையிலும் இரவிலும் சுடுதண்ணீர் குடித்து வந்தால் கெட்ட கொழுப்புகள் இருந்தாலும் கரைய வாய்ப்புள்ளது
5. பிறகு உடற்பயிற்சியின் நடை பயிற்சி மேற்கொள்வதன் மூலம்கொழுப்புகள் அளவை குறைக்க முடியும்
6. மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்த முடியும்
கொழுப்புகள் அதிகமாக இருக்கிறது என்றால் மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு நலமுடன் இருப்பது நம் வாழ்விற்கு பெரிதும் நன்மை பயக்கும்..
– நிரோஷா மணிகண்டன்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..