உலகில் மிக பெரிய விளையாட்டு தொடரான கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மிக பெரிய அணியாக இருக்கும் அர்ஜென்டினா அணியை சௌதி அரேபியா அணி வீழ்த்தி அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது. தற்போது சௌதி மன்னர் அறிவித்துள்ள பரிசால் ரசிகர்கள் உறைந்துள்ளனர்.
கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலக கோப்பை மிக விமர்சையாக நடைபெற்று வருகிறது. உலகில் அதிகமான மக்களால் விரும்பி பார்க்கப்படும் விளையாட்டு கால்பந்து. இதன் உலக கோப்பை தொடர்தான் விளையாட்டு உலகின் மிக பெரிய தொடராகும். இந்நிலையில் உலக புகழ்பெற்ற வீரர் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி சௌதி அரேபியாவிடம் அதிர்ச்சி தோல்வி பெற்றது. உலகமே இந்த வெற்றியை கண்டு அதிர்ச்சி அடைந்தது அதைத்தொடர்ந்து சௌதி அரேபியாவில் பொது விடுமுறையும் அளிக்கபட்டு அந்த வெற்றியை விமர்சையாக கொண்டாடி தீர்த்தனர்.
இந்நிலையில், அந்த போட்டியில் விளையாடிய சௌதி வீரர் அனைவருக்கும் உலகில் மிக விலை உயர்ந்த கார்களில் ஒன்றான ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசாக அளிக்கப்படும் என்று அந்நாட்டின் மன்னர் தெரிவித்துள்ளார். உலக கோப்பை போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தியத்தின் மகிழ்ச்சியில் இவ்வாறு அந்த நாட்டின் மன்னர் பரிசுகளை அறிவித்துள்ளார். இருப்பினும் இது கொஞ்சம் அதிகமாக இருக்கிறது என்று விமர்சனங்களும் எழுந்துள்ளது.