பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் மிக பெரிய வெற்றியை பெற்றுள்ளது. தனது இயக்கத்தில் இரண்டாவது படமாகவும் ஹீரோவாக முதல் படமுமாக நடித்த லவ் டுடே படத்தின் மூலம் அணைத்து ரசிகர்களையும் தன் வசம் ஆகியுள்ளார் பிரதீப் ரங்கநாதன்.
கோமாளி படத்தின் இயக்குனராக தமிழ் சினிமாவில் நுழைந்த பிரதீப் ரங்கநாதன் தனது இரண்டாவது படத்திலேயே ஹீரோவாக களம் இறங்கினார். தற்போதய காதலை மையமாக கொண்டு முக்கியமான கருத்தையும் லவ் டுடே படத்தில் வைத்து ரசிகர்களுக்கு விருந்தளித்தார். இளைஞர்கள் மட்டுமின்றி அணைத்து தரப்பு ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்று தமிழ் நாட்டில் அதிக லாபத்தை பெற்ற படமாக உருவானது.
இந்நிலையில் தெலுங்கில் டப்பிங் செய்யபட்டு நேற்று வெளியானது அப்போது ரசிகர்குளுடன் படத்தை பார்க்க இயக்குனர் பிரதீப் திரையரங்கு சென்றுள்ளார். படம் முடிந்து வெளியே வரும் நிலையில் ரசிகர் ஒருவர் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்து கொண்டிருந்தார் அப்போது அங்கு பிரதீப் ரங்கநாதனை கண்டா அந்த ரசிகர் அவரை அப்படியே தூக்கி கொண்டாடினார். பின்னர் படத்திற்கு தொடர்புடைய நபர்களிடம் நன்றியும் தெரிவித்தார். இந்நிலையில் தனது இரண்டாவது திரைப்படமான லவ் டுடே திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவிலும் வெற்றி அடைந்துள்ளது