பீட்ரூட் ஜூஸ் உடலுக்கு நல்லதா இல்லை ஆபத்தா..?
பீட்ரூட்டின் நிறம் கருஞ்சவப்பில் இருக்கும். இதனால் இதை பலர் சாப்பிட விரும்புவதில்லை. ஆனால் இது ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்தது. அதே சமயம் தொடர்ந்து சாப்பிட்டால் ஒரு சில பக்க விளைவுகளும் வரும் அபாயம் உள்ளது .
பீட்ரூட் ஜூஸில் உள்ள நன்மை தீமைகளை பார்க்கலாம்.
1. பீட்ரூட் ஜூஸ் இதயம் மற்றும் ரத்த ஓட்டத்திற்கு சிறந்தது. இது விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த செயல்திறன் அதிகரிப்பாக உள்ளது ஓட்டப்பந்தயத்தில் ஓடும் வீரர்கள் தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால் விளையாடும் திறன் உடல் தகுதி செயல்திறன் இதெல்லாம் அதிகமாகும்.எனவே விளையாட்டு வீரர்களுக்கு இந்த ஜூஸ் சிறந்தது.
2. பீட்ரூட் ஜூஸ் கல்லீரலில் உள்ள ஆல்கஹால் அல்லாத கொழுப்பை குறைக்க பீட்ரூட்டில் உள்ள நைட்ரிக் அமிலம் ரத்த நாளங்களை தளர்த்தி ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது இது அழுத்தத்தை குறைப்பது மூலம் பிறப்புறுப்புகளுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால் விறைப்பு தன்மை செயல் இழக்கும் அபாயத்தை குறைக்கும் .
3. நீரிழிவு நோய்க்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது.பீட்ரூட் ஜூஸ் சர்க்கரை நோயை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும். இதுசிறுநீரக கற்களை எதிர்த்து போராடுவதாக நம்பப்படுகிறது
4. குறிப்பாக புற்றுநோயை எதிர்த்துப் போராட சிறந்த நிவாரணி ஆகும். புற்று நோய்க்கு எதிரான பாதுகாப்பு கவசமாக பீட்ரூட் உள்ளது. இது எலும்பு மச்சை ரத்த ஓட்டம் இதை சீராக்க தொடர்ந்து பீட்ரூட் ஜூஸ் சாப்பிடுவதால் நல்ல நைட்ரேட் கிடைக்கும். இது உடலில் உள்ள புற்றுநோய் செல்களை வெளியேற்ற உதவுகிறது.
5. ரத்த நாளங்களை தளர்த்திய ரத்த ஓட்டத்தை இதயத்திற்கு எளிதாக்குகிறது. அதனுடன் ரத்த அழுத்தத்தை குறைத்து இதயத்தின் சுமையையும் குறைக்க வல்லது.
6. பீட்ரூட் ஜூஸ் உடலுக்கு மட்டுமல்லாமல் தலைமுடிக்கும் செயற்கையான வண்ணங்களுக்கு பதிலாக இந்த ஜூசை பயன்படுத்தினால் வளமான முடியை பெற முடியும் .
பீட்ரூட்டின் பக்க விளைவுகள் :
1. அளவுக்கு அதிகமாக உண்டால் விஷமாகும் என்ற பழமொழிக்கு ஏற்ப பீட்ரூட் ஜூஸ் அதிகமாக உட்கொள்ளும் போது சில பக்க விளைவுகள் வரும்.
2. முதலில் சிறுநீரின் நிறம் மாறும் இதன் நிறம் மாறினால் ரத்தம் இருப்பதை சந்தேகிப்பது பிரச்சனையாகிவிடும்
3. சிறுநீரகத்தில் வேறு பிரச்சனைகள் இருந்தாலும் இப்படி நிறம் மாறி வரும்போது நம்மால் அதை புரிந்து கொள்ள முடியாது . பீட்ரூட் ஜூஸ் அதிகம் குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும். ஏற்கனவே சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால் அதனை பெரிதாக்கவும் வழி வகுக்கும். இதனால் சிறுநீரக கல்லால் அவதிப்படுபவர்கள் இவற்றை தவிர்க்க வேண்டும்.
4. பொதுவாக உயர் ரத்த அழுத்தத்தை விட குறைந்த ரத்த அழுத்தம் ஆபத்தானது. இது உயர் ரத்த அழுத்தத்திற்கு மருந்து எடுத்துக் கொண்டிருந்தால் பீட்ரூட்டை உட்கொள்வது ஆபத்தை குறைக்கும் .ஆனால் அதற்கு முன்பு மருத்துவரை அணுகி பிறகு ஏதும் உடலில் பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரை அணுகி மருத்துவரின் பரிந்துரையின் படி பீட்ரூட்டை உட்கொள்வது சிறந்த மருந்தாகும்.
5.பீட்ரூட் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட உகந்த ஒரு பொருளாகும்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..