சாப்பிட்ட பின் ஜூஸ் குடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்..? அப்போ இது உங்களுக்கு தான்..!!
காலை, மதியம், மற்றும் இரவு உணவு உண்ட பின் ஜூஸ் குடிக்கும் பழக்கம் உங்களுக்கு இருக்கிறதா..? அப்படி குடித்தால் அது உடலுக்கு ஆரோக்கியமானதா..? என்று நீங்கள் நினைத்தது உண்டா..? அப்போ இதை கட்டாயம் படியுங்கள்.
சிலரின் உணவு பழக்க வழக்கங்களில், பார்த்து பார்த்து ஆரோக்கியமாக சமைப்பது உண்டு, ஒரு சில நேரம் ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுவதும் உண்டு. ஆனால் அதை கெடுக்கும் வகையில் சாப்பிட்ட உடன் டீ,காபி அல்லது ஜூஸ் குடித்து விடுகிறோம்.
இதனால் உடலிற்கு கிடைக்க வேண்டிய ஃபைட்டேட் சத்து, தாதுச்சத்து, மற்றும் வைட்டமின்கள் கிடைக்காமல் போய் விடும். எனவே தான் சாப்பிட்டதும் டீ, காபி, ஜூஸ் குடிக்க வேண்டாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஜூஸ் பழத்தில் தானே தயார் செய்யப்படுகிறது, அதை சாப்பிட்டால் உடலுக்கு நல்லது தானே என்று நீங்கள் நினைக்கலாம்.
சாப்பிட்ட சிறிது நேரத்தில் உடலின் இன்சுலின் சுரக்க ஆரமித்து விடும். ஜூஸில் பால், சர்க்கரை கலப்பதால் இன்னும் அதிக சர்க்கரை பொருள்கள் கலந்து இருக்கும். இவற்றை நாம் குடிக்கும் பொழுது, இன்னும் அதிக இன்சுலின் ரத்தத்தில் சுரக்க நேரிடும்.
பின் செரிமானம் ஆவதற்கும் தாமதமாகும், கலோரிகள் அதிகம் ஏற்றப்படும் பொழுது இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படும்.
சாப்பிட்ட நேரத்தில் இருந்து குறைந்தது அரை மணி நேரம் கழித்து, பழங்களாக சாப்பிட்டால் அது உடலுக்கு நல்லது.
டீ, காபி, ஜூஸ், மசாலா பால் குடிக்க விரும்புபவர்கள் குறைந்தது ஒரு மணி நேரமாவது இடைவேளை விட வேண்டும். சாப்பிட்ட பின் செரிமானம் ஆக வேண்டும் என்றால் குளிர்ந்த நீர் அல்லது வெந்நீர் குடிக்கலாம்.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கியமான தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள, தொடர்ந்து இணைந்திடுங்கள்.
– வெ.லோகேஸ்வரி.