ஜலதோஷத்தால் அவதிப்படுகிறீர்களா..? இனி கவலை வேண்டாம். – இதை செய்து பாருங்கள்
பொதுவாகவே சிலரின் உடலுக்கு ஜலதோஷம் பிடித்துவிடும்.., குளிர் காலம் என்றாலும் சரி அல்லது குளிர் ஊட்ட பட்ட பொருட்களை சாப்பிட்டாலும் சரி உடனே ஜலதோஷம் பிடித்து விடும். இதை பாட்டி வைத்தியம் மூலமாகவே சரி செய்து விடலாம்..
முசு முசுக்கை கீரை ஆனது ஜலதோஷம், தும்மல் மற்றும் இருமல் என அனைத்தயும் சரி செய்யும் வல்லமை பெற்றுள்ளது. அதை எப்படி எல்லாம் உபயோகிக்கலாம் என்று பார்க்கலாம்.
இரைப்பு இரும்பல் : இரைப்பு இருமல் சரி செய்ய 120 கிராம் அளவு தூதுவளை இலை, 80 கிராம் அளவு முசுமுசுக்கை கீரை, ஒன்றாக கலந்து பொடி செய்துக் கொள்ள வேண்டும். தயாரித்த இந்த பொடியில் 1/2 ஸ்பூன் வெண்ணெய் கலந்து சாப்பிட்டால் இரைப்பை இருமல் குணமாகும்.
சீதளம் : சீதளத்தினால் ஏற்படும் ஜலதோஷம் குணமாக தொடர்ந்து முசுமுசுக்கை கீரை சாப்பிட்டு வந்தால் நோய் விரைவில் குணமாகுமாம்.
காசநோய் : முசுமுசுக்கீரையோடு சேர்த்து அதன் கிழங்கையும் சாப்பிட்டு வந்தால், காசநோய் மற்றும் ஆஸ்துமா சரி ஆகிவிடும்.
கண் எரிச்சல் : கண் எரிச்சல் மற்றும் உடல் எரிச்சல் குணமாக முசுமுசுகீரை சாற்றுடன் நல்லெண்ணெய் சம அளவில் எடுத்து காய்ச்சி வாரம் ஒருமுறை தலைக்கு குளித்து வந்தால், உடல் சூட்டை தனித்து விடும். கண்ணுக்கு குளிர்ச்சியும் அளிக்கும். அடிக்கடி கண் எரிச்சல் வராமலும் பார்த்துக்கொள்ளும்.
காய்ச்சல் : முசுமுசுக் கீரையை அரைத்து தோசை மாவில் கலந்து சாப்பிட்டால் காய்ச்சல், இருமல் மற்றும் சளி என அனைத்தும் குணமாகும்.
மேலே குறிப்பிட பட்டவை அனைத்தும் பாட்டி வைத்தியம்.., இயற்கை மருத்துவம் எடுத்துக்கொள்ள விரும்பாதவர்கள் மருத்துவரை அணுகி வைத்தியம் பார்த்துக்கொள்ளலாம்.
– வெ.லோகேஸ்வரி