வினேஷ் போகத் மேல்முறையீட்டு மனு…!! சமரச நீதிமன்றம் தீர்ப்பு..?
ஒலிம்பிக்கில் கூடுதல் எடை காரணமாக நிராகரிக்கப்பட்ட வினேஷ் போகத் மேல்முறையீட்டு மனு விசாரணை ஆகஸ்ட் 13ம் தேதி விளையாட்டுகளுக்கான சமரச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
கடந்த ஜூலை 6ம் தேதி இரவு நடைபெற்ற ஒலிம்பிக் மல்யுத்தத்தில்., பெண்களுக்கான 50 கிலோ எடைப் பிரிவில் அரை இறுதியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மேனுடன், வினேஷ் போகத் போட்டியிட்டனர்.. இந்தியாவின் சார்பில் போட்டியிட்டார் வினேஷ் போகத். முதல் நிமிடத்திலேயே யூஸ்னிலிஸ் நிலை தடுமாறி விழுந்துள்ளார்.. அதனால் அவர் எந்த ஸ்கோரும் எடுக்கவில்லை. பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு ஒலிம்பிக் மல்யுத்த அரையிறுதியில் கியூபா வீராங்கனையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு வினேஷ் போகத் முன்னேறினார். அதன் மூலம், வெள்ளிப் பதக்கம் உறுதி செய்ய்யப்பட்டது.
50 கிலோ எடை பிரிவில் போட்டியிட்ட வினேஷ் போகத்துக்கு இந்திய நேரப்படி இன்று காலை 9 மணியளவில் எடை தகுதி சோதனை செய்தபோது 50 கிலோ மற்றும் 100 கிராம் எடை இருந்துள்ளது. நிர்ணயித்த 50 கிலோவைவிட 100 கிராம் எடை அதிகம் இருந்த காரணத்தால் வினேஷ் போகத் ஒலிம்பிக் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
அதன் பின் தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ ஃபிரீஸ்டைல் பிரிவு பைனலில் பங்கேற்க இருந்த நிலையில், உடல் எடை 100 கிராம் அதிகமாக இருந்ததாக இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டது. இந்தியர்களிடையே பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.., சரியான எடையுடன் களமிறங்கி ரவுண்ட் ஆப் 16, கால் இறுதி, மற்றும் அரையிறுதி என தொடர்ச்சியாக 3 பிரிவில் வெற்றிபெற்றார்.. இப்படி இருக்க அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டது சர்ச்சையை கிளப்பியது.
இந்த முடிவை எதிர்த்து வினேஷ் சார்பில் இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் மேல்முறையீடு செய்தனர். இது தொடர்பாக விளையாட்டு போட்டிகளுக்கான நடுவர் நீதிமன்றம் நேற்று விசாரணை நடத்தியது. 3 மணி நேரத்துக்கும் மேலாக மத்தியஸ்தர் அனபெல் பென்னெட் நடத்திய விசாரணை நிறைவடைந்ததையடுத்து நாளை மறுநாள் இரவு 9.30 மணிக்கு விளையாட்டுகளுக்கான சமரச நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..