ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கிய சம்பவ செந்தில்..!! சென்னை போலீஸ் அதிரடி..!! வெளியான பல பகீர் தகவல்கள்..!!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் ஜூலை 5ம் தேதி சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் 15 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.., அந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது..
இந்த கொலை தொடர்பாக ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் பென்னை பாலு உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 15 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.., அதன் பின் 6 பேரை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.. அப்போது குற்றவாளி அருள் கொடுத்த தகவலின் படி.., காங்கிரஸ் கட்சியின் இளைஞர் மாநில முதன்மை செயலாளர் அஸ்வத்தமானை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்..
அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 9ம் தேதி காலை 11 மணிக்கு ஆஜரான பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜிடம் 7 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக, தண்டையார்பேட்டையை சேர்ந்த ரவுடி சம்பவ செந்தில், தாம்பரம் மண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்த ரவுடி சீசிங் ராஜா ஆகிய இருவரையும் பிடிக்க போலீஸ் தனிப்படை அமைத்து தீவிரம் காட்டி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக செந்தில் தலைமறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது..
அப்போது செந்திலின் செல்போன் சிக்னல் ட்ராக் செய்த போது அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருந்ததும், தனது வழக்கறிஞர் மூலம் தன்மீது வழக்கு ஏதாவது வந்துள்ளதா என தெரிந்துகொண்டு., 11 ஆன்லைன் செயலிகள் மூலமாகவே ரவுடி கூட்டாளிகளுடன் சேர்ந்து கட்ட பஞ்சாயத்து, மற்றும் கொலை உள்ளிட்ட சதி செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்..
இந்நிலையில் டெல்லி தேசிய தகவல் மையத்தின் உதவியோடு செந்திலின் இருப்பிடத்தை கண்டறிந்து அவரை கைது செய்யும் முயற்சியில் சென்னை போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.. அதேசமயம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தற்போது போலீஸ் காவலில் உள்ள ஹரிதரன் மற்றும் வழக்கறிஞர் சிவா ஆகிய இருவரின் போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில் அவர்களை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பூந்தமல்லி கிளை சிறையில் அடைத்தனர்.
கடந்த 5 நாட்களாக நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.., “சம்பவ செந்தில் தனது கூட்டாளியான வழக்கறிஞர் கிருஷ்ணகுமா ர் மூலம் 9 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து வழக்கறிஞர் சிவாவிடம் கொலையாளிகளுக்கு தருவதற்காக கொடுக்கப்பட்ட பணம் என விசாரணையில் தெரியவந்தது.. கிருஷ்ணா தற்போது தலைமறைவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் கிருஷ்ணா வீட்டில் இருந்து பல்வேறு முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்..,
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..