பிள்ளையார்பட்டி மோதகம் இன்னிக்கு செய்யலாமா..!
அரிசி-1கப்.
பாசிப்பருப்பு-1/3 கப்.
வெல்லம்- 1 ½ கப்.
துருவிய தேங்காய்-1 கப்.
உப்பு-1 சிட்டிகை.
நெய்-3 தேக்கரண்டி.
ஏலக்காய் தூள்-1 தேக்கரண்டி.
அரிசி மற்றும் பாசிப்பருப்பை நன்றாக சுத்தம் செய்து அதனை 1 மணி நேரத்திற்கு நீரில் ஊறவைக்க வேண்டும்.
பின் அதனை வடிகட்டி ஒரு காட்டன் துணியில் பரவி விட்டு நிழலில் காய வைக்கவும்.
பின் இதனை வாணலில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு லேசாக வறுத்துக் ஆற வைக்கவும்.
பின் ஒரு மிக்ஸியில் போட்டு ரவை மாதிரி அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் ஒரு ஃபேனை வைத்து 3 கப் தண்ணீர் ஊற்றி சிட்டிகை உப்பு போட்டு கொதிக்க விடவும்.
கொதிக்க தொடங்கியதும் அரைத்ததை போட்டு கொதிக்க வைத்து வேக வைக்கவும். பின் வெல்லத்தை சேர்த்து கிளறவும்.
பின் வெல்லம் கரைந்ததும் துருவிய தேங்காய், ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்து கிளறவும்.
பின் அடுப்பில் இருந்து மாவு பிரிந்து வந்ததும் இறக்கி அதனை நன்றாக ஆற விடவும்.
பின் கையில் நெய் தடவி உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பின் இட்லி பாத்திரத்தில் வைத்து 15 நிமிடம் வேகவைக்கவும்.
அவ்வளவுதான் இனிப்பான மென்மையான மோதகம் தயார்.
