செல்ல பிராணிகள் வளர்ப்போர் கவனத்திற்கு..! இன்னும் 3 மாதத்திற்குள் இது கட்டாயம்..! ராதாகிருஷ்ணன் அதிரடி..!
சென்னையில் செல்லப்பிராணி வளர்ப்போர் அடுத்த மூன்று மாதத்திற்குள் ஆன்லைன் உரிமம் பெற வேண்டும்
சென்னை மாநகராட்சி சார்பாக தெரு நாய்கள் கணக்கெடுப்பு பணி குறித்து பயிற்சி முகாம் ரிப்பன் கட்டிடத்தில் உள்ள அம்மா மாளிகையில் நடைபெற்றது. இதில் என்.ஜி.ஓ.,கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்..
இதில் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் இராதாகிருஷ்ணன் பங்கேற்று அறிவுரைகளை வழங்கினார்.. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தெரு நாய்களை கணக்கெடுக்கும் பணி, world veterinary service சார்பில் இன்று பயிற்சி வழங்கப்பட்டது.
இந்த கணக்கெடுப்பு பணி வரும் 10ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. கடைசியாக சென்னையில் 2018ம் ஆண்டிற்கு பிறகு இந்த கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதில் நாய்கள் ஆணா பெண்ணா தடுப்பூசி போட்டுள்ளதா உள்ளிட்ட பல விஷயங்கள் இந்த கணக்கெடுப்பில் கண்டறியப்படும் என தெரிவித்தார்.
இந்த கணக்கெடுப்பு பணிகளில் கால்நடை மருத்துவர்கள் மட்டும் இன்றி மற்ற தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் இ்ந்த பயிற்சியில் பங்கேற்றனர்.
கடந்த 6 மாதத்தில் மட்டும் 10 ஆயிரத்து 100 நாய்கள் பிடித்து அதில் 7,165 நாய்களுக்கு கருத்தடைகள் செய்யப்பட்டதுள்ளது. 7 முதல் 8 ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. சாலையில் சுற்றித்திரிந்த 1150 மாடுகள் பிடிக்கபட்டுள்ளது.
அவற்றை படப்பை உள்ளிட்ட பெட் வளர்ப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அடுத்த மூன்று மாதங்களுக்குள் செல்ல பிராணிகள் வளர்ப்பவர்கள் லைசன்ஸ் பெற வேண்டும் என்பது மாநகராட்சி தரப்பில் வேண்டுகோள் வைக்கிறோம்.
உச்சநீதிமன்ற அறிவுரைப்படி நாய்களைப் பிடித்தாலும் மீண்டும் அதே இடத்தில் விடுவிக்க வேண்டும் என்று கட்டாயம் உள்ளது. தெரு நாய்கள் மற்றும் செல்லப்பிராணிகளால் பிரச்சனை இருப்பது உண்மையாக உள்ளது.
நாய் ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் நாய்கள் மீது குறைந்தபட்ச நடவடிக்கை எடுத்தால் கூட அவர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஏற்கனவே கூட்டம் நடைபெற்றது. நடைமுறையில் உள்ள மக்கள் பிரச்சனைகளை எடுத்துச் சொல்லி அடுத்த பத்து நாட்களுக்குள் மீண்டும் தன்னார்வலர்கள் மற்றும் கால்நடை துறையினர் உள்ளிட்டோருடன் இணைந்து கூட்டம் நடைபெற உள்ளது…
-லோகேஸ்வரி.வெ