பீர்க்கங்காய் கூட்டு ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
பெருங்காய தூள் – 1/4 தேக்கரண்டி
வெங்காயம் – 1 நறுக்கியது
பச்சை மிளகாய் – 5 கீறியது
பூண்டு – 5 பற்கள்
ஊறவைத்த கடலை பருப்பு – சின்ன கப்
உப்பு – 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி
தண்ணீர் – 1 கப்
பீர்க்கங்காய் – 2
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
தனியாதூள் – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை
நறுக்கியது
செய்முறை:
ஓரு வாணலில் எண்ணெய் ஊற்றி அதில் கடலை பருப்பு,உளுத்தம் பருப்பு,கடுகு,சீரகம் சேர்த்து வதக்க வேண்டும்.
பின் பெருங்காயத்தூள்,வெங்காயம்,பச்சை மிளகாய்,நசுக்கிய பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
பின் இதில் ஊற வைத்த கடலை பருப்பு ,உப்பு,மஞ்சள் தூள் மற்றும் அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து வதக்கி பின் சிறிது வேக வைக்கவும்.
சிறிது நேரத்திற்கு பிறகு மிளகாய்த்தூள்,மல்லி தூள்,கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்க வேண்டும்.