உடலுக்கு வலுவூட்டும் ராகி ஆப்பம்..!
- கேழ்வரகு- 1 கப்
- சாதம்- ¼ கப்
- ஈஸ்ட்- ¼ ஸ்பூன்
- துருவிய தேங்காய்- ¾ கப்
- நாட்டுச்சர்க்கரை- 1 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
ராகி மாவை சலித்து அதனை ஒரு வாணலில் கொட்டி மிதமான தீயில் லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய்,நாட்டு சர்க்கரை மற்றும் சாதம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
ஆறவைத்த மாவை இந்த கலவையுடன் சேர்த்து தண்ணீர் விட்டு கலந்துக் கொள்ள வேண்டும்.
இதில் உப்பு மற்றும் ஈஸ்ட் சேர்த்து 8 மணி நேரத்திற்கு ஊறவிடவும்.
பின் ஆப்பச்சட்டியில் மாவை ஊற்றி ஆப்பம் சுட்டு எடுத்தால் சூடான ராகி ஆப்பம் தயார்.