ஆடிப்பெருக்கு சப்த கன்னியர்கள் வழிபாடு ..!! யார் யாரெல்லாம் வழிபடலாம்..?
ஆடி மாதம் தொடங்கியதுமே திருவிழாக்கள் கலை கட்டிவிடும்.., அதிலும் ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு மிக முக்கியமான நாள்கள். ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி 18 அன்று சப்த கன்னியரை வழிபட்டால் நாம் நினைத்த செயல் எளிதில் நடைபெறும் என்பது ஐதீகம்..,
ஆடிப் பெருக்கு நாளில் கோவில் குளக்கரைகளில் சென்று நீராடினால் சிறந்த பலன் கிடைக்கும்.., இன்று கோவில் குளக்கரையில் நீராடினால் நாம் செய்த பாவங்கள் தீரும் என சொல்லப்படுகிறது. நாம் செய்வதறியாமல் செய்த பாவங்களை ஏற்றுக் கொண்டு, தன்னை வந்து சேர்வதற்கான புண்ணிய பலன்களை கொடுக்கும் சிவ பெருமான் கங்கையை தன்னுடைய தலையில் சூடி உள்ளார். அப்படி உயர்வான புண்ணியத்தை பெருவதற்கு ஏற்ற நாள் தான் ஆடிப்பெருக்கு என்று அழைக்கப்படுகிறது..
இதற்கு மற்றொரு பெயரும் உண்டு ஆடிமாதத்தில் மழை பெய்து விவாசாய பயிர்களை செழிக்க செய்வதால் ஆடி பெருக்கு மிக முக்கியமான ஒன்று.., ஆறு மற்றும் குளங்களில் தண்ணீர் பெருகி இருப்பதால் இதை “ஆடிப்பெருக்கு” என்று அழைப்பார்கள்.
ஆடி பிறந்து 18ம் நாள் கொண்டாடுவதை ஆடி 18 என்று அழைப்பார்கள். இந்த ஆடி 18 அன்று திருமணம் ஆகாத கன்னி பெண்கள்., சப்த கன்னியரை வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும். ஆடி 18 அன்று நாக புற்று கோவிலுக்கு சென்று புற்றுக்கு முன் இருக்கும் சப்த கன்னியர்களுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் ஆகிவிடும் என்பது ஐதீகம்.
திருமணம் ஆன பெண்கள் இன்று கோவில் குளக்கரை., ஆறு ஏரி மற்றும் குளம் கிணறு போன்ற நீர் நிலைகளில் சென்று குளித்து விட்டு மஞ்சள் பிள்ளையார் பிடித்து விளக்கு ஏற்றி ஒரு நெய்வைத்தியம் படைத்து கற்பூர தீப ஆராதனை காண்பித்து வழிபட வேண்டும். அதேசமயம் பெண்கள் தங்களின் ஆயுள் அதிகரிக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு, தாலிக்கயிறு மாற்றிக் கொள்ளுவார்கள்
* திருமணம் ஆன பெண்கள் தாலி கையிறு மற்றும் தாலி சரடு மாற்றிக் கொள்ளலாம்.
* ஆண்கள் ஒரு கருப்பு கயிறு காலில் கட்டிக்கொண்டால் .., கண் திஷ்டிகள் கழிந்து விடும்.
* திருமணம் ஆகாத பெண்கள் கையில் மஞ்சள் கயிறை காப்பு போல கட்டிக் கொள்ளலாம்.
இன்றைய நாளில் செய்ய வேண்டியது :
ஆடிப்பெருக்கு என்பது பெருக்கத்திற்கான ஒரு மங்கலகரமான நாளாகும். இன்றைய நாளில் நாம் எந்த பொருள் வாங்கினாலும் அது பெருகிக் கொண்டே போகும் என்பதால் இன்றைய நாளில் பலரும் தங்கம்.., வெள்ளி அல்லது வீட்டிற்கு தேவையான பல அத்தியாவசய பொருட்கள் வாங்குவது வழக்கம்.
-லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..