கத்தரிக்காய் துவையல் ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் – 1 கிலோ
தனியா – 1 மேசைக்கரண்டி
சீரகம் – 1 மேசைக்கரண்டி
எண்ணெய்
தக்காளி – 4 நறுக்கியது
புளி
மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி
கல்லுப்பு – 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம்
தாளிக்க
எண்ணெய் – 3 தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
இடித்த பூண்டு
கறிவேப்பிலை
சிவப்பு மிளகாய் – 2
செய்முறை:
கத்தரிக்காயில் தண்டுகளை அகற்றிவிட்டு துண்டுகளாக வெட்டி உப்பு நீரில் போட்டு வைக்க வேண்டும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி அதில் கொத்தமல்லி,சீரகம் மற்றும் சிவப்பு மிளகாய் சேர்த்து வறுக்க வேண்டும். பின்பு அதனை ஆற வைக்க வேண்டும்.
மற்றொரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் கத்தரிக்காயை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.
அதில் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். புளி,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து வேகவைக்க வேண்டும்.
ஒரு மிக்ஸியில் கொத்தமல்லி,சீரகம்,மிளகாய் கலவையை அரைத்து பின் அதில் கத்தரிக்காய் கலவை சேர்த்து சிறிது கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும்.
பின் அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி அதில் கடலை பருப்பு,கடுகு,சீரகம் சேர்த்து தாளித்து பின் பூண்டு,கறிவேப்பிலை,சிவப்பு மிளகாய் சேர்த்து வதக்கி அதனை அரைத்த கலவையுடன் சேர்த்து கலந்து விட வேண்டும்.
அவ்வளவுதான் சுவையான கத்தரிக்காய் துவையல் தயார்.