“மேகதாது விவாகரத்தில் பிரதமர் சொல்வது தற்கொலைக்கு சமம்..” அமைச்சர் துரைமுருகன் பேட்டி..!
மேகதாது அணை விவகாரத்தில் பேச்சுவார்த்தைகள் தங்களது பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளுங்கள் என பிரதமர் மோடி கூறுவது தற்கொலைக்கு சமமானது என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேனூர்-இலத்தேரி இடையே, ரூ. 29 கோடியில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டிய பின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது பேசிய அவர்..,
தற்போது பிரதமர் மோடி, மேகதாது அணை தொடர்பாக தமிழக அரசும், கர்நாடக அரசும் பேச்சு வார்த்தை நடத்தி தீர்த்துக்கொள்ளுமாறு மோடி கூறியுள்ளார்..
ஆனால் தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கர்நாடகா அரசு தயாராக இல்லாத போது தமிழ்நாடு அரசால் எப்படி பேச்சுவார்த்தை நடத்த முடியும்…
கர்நாடக நீர்வளத்துறை அமைச்சரும் டி.கே.சிவக்குமார் பேச்சு வார்த்தை நடத்த விருப்பம் இல்லை என தெரிவித்துள்ளார்..
அப்போது, “ஏற்கனவே 38 முறை பேசியும் சுமூக தீர்வு ஏற்படவில்லை என்பதால் தான் காவிரி பிரச்சனை நடுவர் மன்றத்துக்கு சென்றது. நேரடியாகவே பட்டேலும்-கலைஞரும் பிரதமராக இருந்த தேவகெளடாவை வைத்துக்கொண்டே 3 நாள்கள் பேசினோம் அப்போது கூட இந்த பிரச்சனைக்கு முடிவுக்கு வரவில்லை..
இந்த பேச்சுவார்த்தையால் மட்டும் இந்த பிரச்சனை தீராது என்பதால் மட்டுமே, முடிவை மத்திய அரசுக்கு அனுப்பினோம். அதன்பின்னே வி.பி.சிங் அவர்கள் நடுவர் மன்றம் அமைப்பதாக உறுதியளித்தார்.
இப்போது தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தை நடத்தினால் கர்நாடக அரசு ஒத்துழைக்காது, இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றால் இரண்டு வருடங்களுக்கு காலதாமதம் ஆகும்.
அப்போது கர்நாடக அரசு பேச்சுவார்த்தையில் தீர்த்துகொள்கிறோம் என்று சொல்லும், அப்போது அந்த வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து அனுப்பிவிடும், பின்பு பேச்சுவார்த்தை நடத்த கர்நாடக அரசு அழைக்காது. எனவே, பிரதமர் மோடி இரண்டு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தையில் தீர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்வது தற்கொலைக்கு சமம்” என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..