காரசாரமான கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்யலாமா..!
தேவையான பொருட்கள்:
சிக்கன் – 1/2 கி
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
சோம்பு – 1 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 3 ஸ்பூன்
மல்லித்தூள் – 2 ஸ்பூன்
சீரகத்தூள் – 1 ஸ்பூன்
மிளகுத்தூள் – 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் – சிறிதளவு
கறிவேப்பிலை – 1 கப்
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
ADVERTISEMENT
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
-
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து அதில் மஞ்சள்த்தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
-
ஒரு வாணலை அடிப்பில் வைத்து சூடு செய்து கறிவேப்பிலை, மிளகு மற்றும் சோம்பு சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
-
வறுத்ததை ஆற வைத்து அதை நன்றாக பொடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
-
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயத்தை வதக்கி, அதில் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசலை போகும் வரை வதக்கி பின் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
-
பின்னர் மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், கரம் மசாலா தூள் போட்டு கலந்து வதக்க வேண்டும்.
-
பின் தேவையான அளவு உப்பு போட்டு சிக்கன் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
-
சிக்கனுக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவைத்து இறக்கும் சமையத்தில் பொடித்து வைத்துள்ள கறிவேப்பிலை பொடியை சேர்த்து வதக்கி இறக்கினால் சுவையான காரசாரம் நிறைந்த கறிவேப்பிலை சிக்கன் ரெடி.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.