பெற்ற பிள்ளைகளை விற்பனை செய்த தந்தை..!! போலீசில் வெளிவந்த பல திடுகிடும் தகவல்..!!
பெற்ற 5 பிள்ளைகளை ஒரு குழந்தைக்கு 1 லட்சம் ரூபாய் என விற்பனை செய்த தந்தை மற்றும் புரோக்கர் உட்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்..
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகேயுள்ள சித்தூர் கிராமத்தை சேர்ந்த திம்மபதியான்வளவு, பகுதியைச் சேர்ந்த சேட்டு மற்றும் குண்டுமல்லி இவர்கள் இருவரும் கரும்பு வெட்டும் கூலித்தொழிலை செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப வறுமையின் காரணமாக இரண்டு குழந்தைகள் உயிர் இழந்துள்ளதாக சொல்லப்படுகிறது..
இதனால் மிகுந்த இன்னல்களுக்கு ஆளான சேட்டு சேட்டு தன்னுடைய இரண்டு பெண் குழந்தை மற்றும் 1 ஆண் குழந்தையை புரோக்கர் மூலம் ஒரு குழந்தைக்கு ஒரு லட்சம் என விற்பனை செய்ததாக சொல்லப்படுகிறது..
அதாவது, கடந்த 15 நாட்களுக்கு முன் பிறந்த ஆண் குழந்தையை கூட இவர்கள் விற்றுள்ளனர்.. குழந்தையை விற்பனை செய்வதற்காக குழந்தைகள் விற்பனை செய்யும் புரோக்கர் செந்தில் முருகன், மற்றும் ஆலச்சம்பாளையம் பகுதியைச் சேர்ந்த முனுசாமி, ஆகியோரை சந்தித்து தன்னுடைய சூழல் பற்றி எடுத்துக்கூறி குழந்தையை விற்று தருமாறு கூறியுள்ளார்..
அப்போது தான் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த தேவராஜ், என்பவருக்கு குழந்தை இல்லாததால் குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பதற்காக குழந்தையை தேடுவது தெரியவந்தது..
இதனை அறிந்த செந்தில் முருகன் மற்றும் முனுசாமி, சேட்டுவை சந்தித்து குழந்தைக்கு 1 லட்சம் தருவதாகவும், குழந்தையை முறைப்படி தத்து கொடுக்க வேண்டும் என வற்புறுத்தியதாக சொல்லப்படுகிறது..
அதற்கு சேட்டு மறுப்பு தெரிவித்ததால், தேவராஜ் என்பவர் சேலம் மாவட்டம் குழந்தைகள் நல அலுவலர் ஸ்ரீ முரளிக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்..
அதையடுத்து, அதிகாரிகள் சேட்டுவை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர் அப்போது சட்டவிரோதமாக ஏற்கனவே மூன்று குழந்தைகளை புரோக்கர்கள் மூலம் குழந்தைகளை விற்பனை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்… மேலும் குழந்தைகள் விற்பனை செய்யும் புரோக்கர்களான செந்தில் முருகன், முனுசாமி, உட்பட இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
அதேபோல் இதற்கு முன் பெண் பிள்ளைகளை விற்பனை செய்ய உதவியாக இருந்த இடைத்தரர்களான பாலாமணி, தமிழ்செல்வன், லோகாம்பாள், என மொத்தம் ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள புரோக்கர்களிடம் இதுவரை எத்தனை குழந்தைகளை இதுபோல விற்பனை செய்துள்ளார்கள் அல்லது கடத்தி வந்து விற்பனை செய்துள்ளார்களா என்ற பல்வேறு கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்..
காவல்துறையினர் விசாரணைக்கு பின் ஆறு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் எடப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..