மசாலா ஆப்பம் ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
ஆப்ப மாவு இரண்டு கப்
எண்ணெய் தேவையானது
உப்பு தேவையானது
அரைக்க:
துருவிய தேங்காய் இரண்டு ஸ்பூன்
சோம்பு கால் ஸ்பூன்
பச்சை மிளகாய் ஒன்று
வெங்காயம் 100 கிராம்
மஞ்சள்தூள் கால் ஸ்பூன்
செய்முறை:
ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய் இரண்டு ஸ்பூன், சோம்பு கால் ஸ்பூன், பச்சை மிளகாய் ஒன்று, வெங்காயம் 100 கிராம் மற்றும் மஞ்சள்தூள் கால் ஸ்பூன் சேர்த்து சிறிது நீர் விட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஆப்ப மாவில் அரைத்த விழுது, உப்பு சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும்.
ஒரு ஃபேனில் ஒரு கரண்டி மாவு எடுத்து ஆப்பம் ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி எண்ணெய் விட்டு வேகவைக்கவும்.
ஆப்பம் நன்றாக வெந்ததும் தட்டிற்கு மாற்றவும்.
அவ்வளவுதான் இதுபோல மற்ற மாவு அனைத்தையும் ஊற்றி எடுத்துக் கொள்ளவும்.
எப்பவும் இட்லி தோசை என சாப்பிட்டு போர் அடுத்து இருந்தால், வீட்டில் உள்ளவர்களுக்கு இதை செய்து கொடுங்க விரும்பி சாப்பிடுவாங்க.