டுடே ஸ்நாக் சிக்கன் மிளகாய் பஜ்ஜி…!
தேவையான பொருட்கள்:
சிக்கன் சமைக்க:
சிக்கன் – 200 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மிளகு தூள் – 1/4 தேக்கரண்டி
உப்பு
தண்ணீர்
சிக்கன் நிரப்புதல்:
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
வெங்காயம் – 1 (நறுக்கிய)
பச்சை மிளகாய் – 1 (நறுக்கிய)
இஞ்சி – 1 (நறுக்கிய)
பூண்டு – 6 பற்கள் (நறுக்கிய)
தக்காளி – 2 (நறுக்கிய)
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
மல்லி தூள் – 1 தேக்கரண்டி
சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி
உப்பு
கொத்தமல்லி இலைகள்
பஜ்ஜி மாவு தயாரிக்க:
கடலை மாவு – 2 கப்
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
ஓமம் – 1/2 தேக்கரண்டி
உப்பு
தண்ணீர்
செய்முறை:
சிக்கன் சமைத்தல்:
ஒரு குக்கரில் சிக்கன்,மஞ்சள்தூள்,மிளகுத்தூள்,இஞ்சி பூண்டு பேஸ்ட்,மிளகாய்த்தூள்,உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி நான்கு விசில் வைத்து அடுப்பை அணைக்கவும்.
பின் சிக்கன் மற்றும் நீரை தனியே வடிக்கட்டிக்கவும்.
சிக்கன் நிரப்புதல்:
வேகவைத்த சிக்கன் துண்டுகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய்,இஞ்சி,பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பொன்னிறமாக வதக்கவும்.
பின் அதில் நறுக்கிய தக்காளி,சீரகத்தூள்,மிளகாய்த்தூள்,மல்லித்தூள்,கரம் மசாலா தூள்,உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
பின் அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.வேகவைத்த நீரை அதில் கலந்து வதக்க வேண்டும்.
அடைசியில் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
பஜ்ஜி மாவு:
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு,ஓமம்,மிளகாய்த்தூள்,உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு தயாரிக்க வேண்டும்.
சிக்கன் மிளகாய் பஜ்ஜி:
பஜ்ஜி மிளகாயை கீறி அதில் இருக்கும் விதைகளை நீக்கி அதனுள் சிக்கன் கலவையை வைத்து பஜ்ஜி மாவில் நனைத்தி சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரிக்க வேண்டும்.
அவ்வளவுதான் சுவையான சிக்கன் மிளகாய் பஜ்ஜி தயார்.
