நாவில் எச்சில் ஊறும் பலாப்பழ கேசரி…!
பலாப்பழம்
நெய் தேவைக்கு
திராட்சை சிறிது
முந்திரி சிறிது
தண்ணீர் 2 கப்
ரவா அரை கப்
ஏலக்காய் தூள் 1 ஸ்பூன்
குங்கும பூ சிறிது
சர்க்கரை 1 கப்
பலாப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.பின் நறுக்கியதில் பாதியை ஒரு மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலில் நெய் ஊற்றி முந்திரி திராட்சை வறுத்துக் எடுத்துக் கொண்டு, அதே நெய்யில் ரவையை கொட்டி லேசாக வறுத்துக் கொள்ளவும்.
மற்றொரு வாணலில் நெய் சேர்த்து அரைத்து வைத்துள்ள பலாப்பழ விழுதை சேர்த்து வதக்க வேண்டும்.
பின் அத்துடன் நறுக்கிய பலாப்பழ துண்டுகளை போட்டு கலந்து தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.
அதில் ஏலக்காய்த்தூள்,குங்குமப்பூ கலந்த நீர், ரவை சேர்த்து கிளறவும்.
ரவை வெந்ததும் சர்க்கரை சேர்த்து கிளறிக்கொண்டே நெய் சேர்த்து கிளறவும்.
வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து கிளறி கெட்டியானதும் இறக்கவும்.
அவ்வளவுதான் பலாப்பழ கேசரி தயார்.
