தேங்காய் பிஸ்கட் ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு 250 கிராம்
சர்க்கரை 100 கிராம்
தேங்காய் 1
நெய் 250 மிலி
பால் 250 மிலி
ஏலகாய்த்தூள் சிறிது
முந்திரி 50 கிராம்
ப்ளம்ஸ் 50 கிராம்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பாலை சேர்த்து காய்ச்சவும்,பின் சர்க்கரை,நெய் சேர்த்து ஒருமுறை கொதித்தும் இறக்கவும்.
ஒரு வாணலில் நெய் சேர்த்து தேங்காயை துருவி வறுக்க வேண்டும்.
கோதுமை மாவில் வறுத்த தேங்காய்,ப்ளம்ஸ்,முந்திரி சேர்த்து கலந்து அதில் காய்ச்சிய பால் சேர்த்து பிசையவும்.
பின் அந்த மாவில் உங்களுக்கு விரும்பிய வடிவில் வெட்டிக் கொள்ளவும்.
ஒரு சட்டியை வைத்து நெய் சேர்த்து அதில் வெட்டிய பிஸ்கட்டை சேர்த்து இருபுறமும் சிவந்து வந்ததும் எடுக்கவும்.
அவ்வளவுதான் சுவையான தேங்காய் பிஸ்கட் தயார்.