பிரபல நடிகையின் கணவரை சில்க் ஸ்மிதா காதலிச்சாரா?
சில்க் ஸ்மிதா:
வண்டி சக்கரம் என்ற படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் சில்க் ஸ்மிதா. இந்த படத்தில், சில்க் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததால், அதே பெயருடன் அவர் அழைக்கப்பட்டார்.
அதன்பிறகு, பல்வேறு படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்த இவர், 1996-ஆம் ஆண்டு அன்று, மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இன்றும் அவரது வாழ்க்கையும், மரணமும், மர்மமாக தான் இருந்து வருகிறது. இந்நிலையில், சில்க் ஸ்மிதா பற்றி, நடிகை சுலக்ஷனா பேசியிருக்கிறார்.
நடிகை சுலக்ஷனா:
அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “நான் சினிமாவில் முன்னணி நடிகையாக நடித்துக் கொண்டிருக்கும் போது தான் எம் எஸ் விஸ்வநாதனின் மகனை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். அந்த நேரத்தில் எங்களுடை காதலுக்கு எங்கள் வீட்டில் சம்மதம் கிடைக்கவில்லை.
ஆனால் எம்.எஸ். விஸ்வநாதன் என்னை அவருடைய மருமகளாக ஏற்றுக் கொண்டார்” என்று சுலக்ஷனா பேசியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், சில்க் ரொம்ப பாசமான பொண்ணு அப்பவே சில்க் என்னிடம் நான் தான் உங்க கணவரை முதல்ல லவ் பண்ணேன்.
ஆனா நீங்க கல்யாணம் பண்ணிட்டீங்க அப்படின்னு சொல்லுவாங்க. அப்ப கூட நான் அப்படியே இருந்துகிறேன் நீ வேணா என் கணவரை லவ் பண்ணிக்கோ அப்படின்னு நான் சொல்லி இருக்கிறேன். அதற்கு சில்க் ஸ்மிதா வேண்டாம் என்று சொல்லிடுவாங்க” என்று கூறினார்.
மேலும், சில்க் ஸ்மிதாவின் மரணம் குறித்து பேசிய சுலக்ஷனா, “சில்க் தற்கொலை பண்ணிக்கிற ஆளு கிடையாது. அவங்க ரொம்ப தைரியமான பொண்ணு. ஏதோ எங்கேயோ தப்பு நடந்திருக்கு” என்று தெரிவித்துள்ளார்.
-பவானி கார்த்திக்