குழந்தைகளுக்கு பிடித்த தேங்காய் சாதம்…!
பாஸ்மதி அரிசி 1 கப்
தேங்காய் துருவல் 1 1/2 கப்
எண்ணெய் தேவையானவை
நெய் தேவையானவை
உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
சீரகம் அரை ஸ்பூன்
காய்ந்த மிளகாய் 3
கறிவேப்பிலை சிறிது
பெருங்காயத்தூள் சிறிது
இஞ்சி 1 துண்டு நறுக்கியது
பச்சை மிளகாய் 2 நறுக்கியது
வறுத்த வேர்க்கடலை தேவையானவை
முந்திரி தேவையானவை
உப்பு தேவையானவை
பாஸ்மதி அரிசியை சுத்தம் செய்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலில் நெய் எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, சீரகம், கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பொரித்துக் கொள்ளவும்.
அத்துடன் பெருங்காயத்தூள்,இஞ்சி,பச்சை மிளகாய்,வேர்க்கடலை,முந்திரி மற்றும் பருப்பு சேர்க்கவும்.
பின் உப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்து கிண்டவும்.
இதில் வேகவைத்த சாதம் துருவிய தேங்காய் சேர்த்து கிளறவும்.
அவ்வளவுதான் சுவையான தேங்காய் சாதம் தயார்.
