சுவையான ரவா கிச்சடி செய்யலாமா..!
ரவை என்பது சத்துகள் அதிகம் நிறைந்த ஒரு உணவு பொருளாகும். ரவையில் குறைந்த அளவிலான கொழுப்புகள் உள்ளதால் இது உடல் எடை குறைப்புக்கு உதவியான உணவாகும். இத்தகைய ரவையை நாம் கிச்சடி செய்து அசத்துவோமா..
தேவையான பொருட்கள்:
வறுக்க
- ஒரு கப் ரவை
கிச்சடி செய்ய
- கடுகு
- எண்ணெய்
- கடலைப்பருப்பு
- உளுத்தம் பருப்பு
- நான்கு பச்சை மிளகாய்
- ஒரு துண்டு இஞ்சி
- ஒரு பெரிய வெங்காயம்
- மஞ்சள் தூள்
- ஒரு தக்காளி
- கேரட்
- பீன்ஸ்
- பச்சை பட்டாணி
- உப்பு
- நெய்
செய்முறை:
ADVERTISEMENT
- ஒரு வாணலை அடுப்பில் வைத்து அதில் ஒரு கப் ரவை சேர்த்து சிம்மில் வைத்து லேசாக நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
- ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும் பின் அதில் கடுகு, கடலை பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
- பின் பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து கிளறிவிடவும்.
- அடுத்தது நறுக்கிய இஞ்சி மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
- கொஞ்சமாக மஞ்சள்தூள் சேர்த்து கிளறிவிட்டு நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
- பின் கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு வதக்கவும்.
- காய்கறிகள் ஓரளவிற்கு வெந்ததும் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
- பின் வறுத்து வைத்த ரவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறி கொண்டே இருக்க வேண்டும்.
- கடைசியாக சிறிது நெய் சேர்த்து கிளறிவிட்டு இறக்க வேண்டும்.
- அவ்வளவுதான் சுவையான ஆரோக்கியம் நிறைந்த ரவா கிச்சடி தயார்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.