தன்னம்பிக்கையோடு செயல் படு – குட்டி ஸ்டோரி-25
ஏழை ஒருவன் செல்வந்தர் ஆவதற்கு முனிவரை பார்க்கச் சென்றுள்ளான்.
ஏழை : குருவே.., நான் பெரும் ஏழை. என்னிடம் என் உயிரைத் தவிர வேறு எந்த சொத்தும் இல்லை. நான் நல்ல செல்வந்தராக ஒரு வழி சொல்லுங்கள் என கேட்டுள்ளார்.
முனிவர் : நான் 5000 தருகிறேன், உன் கைகளை என்னிடம் வெட்டிக் கொடு என கேட்டுள்ளார்..
ஏழை : 5000 ரூபாய்க்காக என் கைகளை என்னால் இழக்க முடியாது என்று கூறினான்.
முனிவர் : சரி, நான் உனக்கு 15,000 ரூபாய் தருகிறேன், உன் கால்களை வெட்டிக்கொடு என கேட்டுள்ளார்..
ஏழை : அதற்கும் ஒப்புக் கொள்ளவில்லை.
முனிவர் : சரி 50,000 ரூபாய் தருகிறேன், உன் கண்களையாவது கொடு” என கேட்டுள்ளார்.
ஏழை : கண் பார்வை இல்லாமல் நான் எப்படி அனைத்தையும் பார்ப்பது..
முனிவர் : சரி நான் உனக்கு இருபது லட்சம் தருகிறேன், உன் உயிரைக் கொடு என்றார்.
ஏழை : என்னால் நிச்சயம் நீங்கள் சொல்வதை செய்ய முடியாது உயிர் இல்லாமல் என்னால் எப்படி பிழைக்க முடியும் என கேட்டுள்ளார்..
முனிவர் : உன்னிடம் உன் உயிரைத் தவிர வேறு எந்த சொத்தும் இல்லை, மேலும் எவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்தாலும் கொடுக்க விரும்பாத விலை மதிப்பற்ற உயிரை கொண்டுள்ள நீ உழைத்து முன்னேறு.. நிச்சயம் உனக்கு வெற்றி கிடைக்கும்..
இந்த உலகில் விலைமதிப்பில்லாதது.. தன்னம்பிக்கை, நம்பிக்கை மட்டுமே அதை மட்டும் விட்டுவிடாதே..
இதை படிக்க மறக்காதிங்க : எல்லாரும் ஒற்றுமையாக இருந்தா வெற்றி உறுதி.. குட்டி ஸ்டோரி- 24
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..