பிடிக்காததை விட இப்படி கூட முயற்சி செய்யலாம்..! குட்டி ஸ்டோரி-23
ஒரு குடிகாரன் நீண்டநாளாக குடியில் இருந்து வெளி வரமுடியாமல் தவித்துள்ளான்.., அப்போது அந்த குடிகாரனின் நண்பர் ஒருவர் “முனிவர்” ஒருவரை பார்க்க அழைத்து செல்லுகிறார்..
வணக்கம் சாமி நான் ஒரு குடிகாரன்.., நீண்டநாளாக இந்த தீயப்பழக்கத்தில் இருந்து என்னால் வெளி வரமுடியவில்லை. நான் திருந்துவதற்கு ஒரு வழி சொல்லுங்கள் என கேட்கிறார்..
அதற்கு அந்த முனிவர் ஒரு தூணைக் கட்டிப் பிடித்துக் கொண்டு.., தூணைப் பார்த்து, ஐயோ என்னை விடு விடு.., என கத்திக் கொண்டிருந்தார்.
இதை பார்த்த அந்த குடிகாரன், ஐயா “நீங்கள்தானே தூணைப் பிடித்து கொண்டிருக்கிறீர்கள்..? பிறகு ஏன் தூணை போய் விடுவிடு என சொல்லுறீங்க என கேட்க..
அதற்கு அந்த முனிவர் சிரித்துக் கொண்டே, “நான் தூணைப் பிடித்துக் கொண்டிருப்பது போல, நீயும் குடியைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய்.., அதை நீ தான் விட முடியும் என முனிவர் சொல்லுகிறார்..
இது மாதிரி நம்பளும் பல பிடிக்காத விஷயத்தை இறுக்கி பிடித்து கொண்டு இருக்கிறோம்.. ஒரு விஷயத்தை விட்டு வெளிய வர நம்ப தான் முயற்சி பண்ணனுமே தவிர அது நம்பள விட்டு போயிடும்னு எதிர்பார்க்க கூடாது..
இதை படிங்க முதல : நமக்கு கெடுதல் நினைச்சாலும் நம்ப நல்லதையே நினைப்போம்..!! அதுக்கான பலன் நமக்கு இப்படி கூட கிடைக்கும்..!! குட்டி ஸ்டோரி-22
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..