குழந்தை பெற்ற பின் உடல் எடை குறைய ஒரு ரகசியம்..!!
குழந்தை பெற்ற பின் ஒரு சில பெண்களுக்கு உடல் எடை அதிகரித்து விடும், ஒரு சில பெண்களுக்கு பழைய உடல் நிலை வந்து விடும். இந்த உடல் மாற்றம் ஏன் ஏற்படுகிறது. இதை எப்படி சரிசெய்வது என்பது பற்றி பார்க்கலாம்.
இந்த உடல் எடை மாற்ற பிரச்சனைக்கு “போஸ்ட் பார்ட்டம் பெல்லி ஃபேட்” என்று பெயர். குழந்தை பெற்ற பின் பழைய உடல் நிலை திரும்பவில்லை என்றால், அதை நினைத்து பெண்கள் கவலை கொள்ள வேண்டாம். அப்படி கவலை கொண்டால் அது அதிக மன உளைச்சலுக்கு ஆளாக்கி விடும்.
குழந்தை பெற்ற பழைய உடல் நிலை திரும்ப ஆறுமாதங்கள் ஆகும். அந்த ஆறுமாதத்தில் இதை நீங்கள் செய்தாலே உங்கள் உடல் எடை குறைந்துவிடும்.
கர்ப்பகாலத்தில் குழந்தை வயிற்றில் இருக்கும் பொழுது, குழந்தை வளர.., கர்ப்பப்பை விரிவடையும். இதனால் வயிறு மற்றும் வயிற்றின் தசைப்பகுதியும் சேர்ந்து விரிவடையும். குழந்தை பெற்ற பின் மீண்டும் அவை பழைய நிலைமைக்கு வர, குறைந்தது 6 முதல் 8 வாரங்கள் ஆகும்.
அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்கள், அந்த தழும்பின் மேல் அழுத்தும் படி துணி இறுக்கி அணியக் கூடாது, எப்பொழுதும் காற்று புகும்படியான துணியை அணிய வேண்டும்.
குழந்தை பெற்றவுடன் மருத்துவமனையில் இருக்கும் பொழுதே, உங்கள் மகப்பேறு மருத்துவரை சந்தித்து “அப்டாமினல் பைண்டர்” உபயோகிப்பதை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும்.
தசைகள் சுருங்க யோக செய்ய வேண்டும். தாய்ப்பால் தொடர்ச்சியாக கொடுப்பதன் மூலமும் இவை சரியாகி விடும். அறுவை சிகிச்சை செய்தவர்கள், ஆறு மாதத்திற்கு பிறகு பெல்ட் அணியலாம்.
அதற்கு முன் அணிந்தால். தையல் போட்ட இடம் விரிவடைய செய்யும்.
மேலும் இதுபோன்ற பல பெண்கள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.