மதுபோதையால் ஏற்பட்ட விபரீதம்..! 5 பேர் சிறையில் அடைப்பு..! நடந்தது என்ன..?
மதுரை வில்லாபுரம் அருகே பராசக்தி நகர் அமைந்துள்ளது, பராசக்தி அருகே உள்ள வயல்வெளி பகுதியில் இளைஞரின் உடல் கிடந்தது. இது குறித்து அவ்வழியாக சென்ற குடியிருப்பு வாசிகள் அவனியாபுரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவனியாபுரம் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது இளைஞரின் உடல் அருகே அவரது செல்போன் கிடந்துள்ளது., அந்த செல்போனை காவல்துறையினர் கைப்பற்றி சுவிட்ச் ஆன் செய்து பார்த்ததில் அடையாளம் தெரியாமல் கொலை செய்யப்பட்ட இளைஞர் அவனியாபுரம் அருகே உள்ள மீனாட்சி நகரில் வசித்து வரும் நாராயணன் ராதா தம்பதியரின் இளைய மகன் மனோஜ் என்பதும் மீனாட்சி பஜாரில் உள்ள 67 ஆம் நம்பர் செல்போன் கடையில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து அவனியாபுரம் காவல்துறையினர் மனோஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் மிகவும் பரபரப்பான நிலையில் இச்சம்பவம் குறித்து அவனியாபுரம் காவல்துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை மனோஜின் கொலை சம்பந்தமாக அவனியாபுரம் காவல் துறையினர் ஐந்து பேரை கைது செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அவனியாபுரம் காவல்துறையினர் இரண்டாம் கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அவனியாபுரத்தில் உள்ள மதுபான கடையில் மது அருந்தும் போது எங்களுக்கும் மனோஜ்க்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு வாய்த்தகராறு சண்டையில் முடிந்தது.
எனவே இதை சமாதானம் செய்யும் விதமாக கடந்த ஜூலை 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஒயின் ஷாப் ஏற்பட்ட தகராறு சமாதானம் செய்வதாக பேசி மனோஜை வீட்டில் சென்று அழைத்து வந்தோம், வயல் வெளிக்கு மனோஜை அழைத்துச் சென்று வயல் வெளியில் மனோஜுடன் மது அருந்துவது போல் அருந்தி பின்னர் வெட்டி கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து அவனியாபுரம் காவல் துறையினர் மனோஜின் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ஐவரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..