உருளைக்கிழங்கு உணவு பிரியர்களுக்கு ஒரு அதிர்ச்சி..!! கட்டாயம் படியுங்கள்
உருளைக்கிழங்கில் செய்யப்படும் உணவுகள் பலருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதுவும் சைவ பிரியர்களுக்கு சொல்லவே வேண்டாம். உருளை கிழங்கு சிப்ஸ், உருளை கிழங்கு பொரியல், ஸ்ப்ரிங் ரோல் மற்றும் ஃபிரென்ச் ஃபிரைஸ் என அடுக்கி கொண்டே போகலாம்.
ஆனால் அதிகமாக ஃபிரென்ச் ஃபிரைஸ் சாப்பிட்டால் மன அழுத்தத்தை ஏற்படுத்துமாம், இந்த ஆய்வை சீனாவில் நடத்திய போது உறுதியானது.
ஃபிரென்ச் ஃபிரைஸில் அக்ரிலமைடு என்ற சேர்மம் அதிகமாக இருக்கிறது. உருளை கிழங்கை பொரிக்கும் பொழுது இது உருவாகிறது.., அதிக படியான வெப்பத்தில் டீப்ஃபிரை பண்ணும் பொழுது இந்த நச்சுப் பொருள் உருவாகிறது.
உருளைக்கிழங்கில் அதிக படியான மாவுப்பொருள் இருப்பதால் அக்கிரிலமைடு உருவாகிறது. அக்கிரிலமைடு உடலில் அதிகமானால் மனசோர்வு ஏற்படும். நாளடைவில் அது புற்று நோயாக மாறிவிடும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிக உடல் பருமனும், இதயம் சம்மந்தமான நோய்களும் ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளனர். வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை உணவில் உருளைக்கிழங்கு சேர்த்துக் கொள்வது, சிறந்தது.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கியமான தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
-வெ.லோகேஸ்வரி