ஆரோக்கியமான சிறுதானிய காலை உணவு..!
அன்றாடம் இட்லி, தோசை என செய்து சாப்பிட்டு உங்களுக்கு அளுத்துப்போய் இருந்தால் ஒரு முறை வீட்டில் இந்த மாதிரி சிறுதானியம் வைத்து காலை உணவை சமைத்து ருசித்து பாருங்க உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இது ரொம்ப பிடிக்கும்.
தேவையான பொருட்கள்:
- 150 கிராம் குதிரைவால் அரிசி
- 2 பச்சை மிளகாய்
- சிறிதளவு இஞ்சி
- 3 ஸ்பூன் மிளகு தூள்
- உப்பு தேவையான அளவு
- தண்ணீர் தேவையான அளவு
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 டீஸ்பூன் பெருங்காயம்
- கொத்தமல்லி இலை
- கறிவேப்பிலை
செய்முறை:
முதலில் அரிசியை தண்ணீர் ஊற்றி சுத்தமாக அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ள வேண்டும்.
இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சீரகம் சேர்த்து தாளித்து பின் பெருங்காயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
பின் சிறுதானியம் மற்றும் உப்பை சேர்த்து கிளறிவிட வேண்டும்.
அடுத்ததாக வாணலை மூடி 5 நிமிடங்களுக்கு வேக வைக்க வேண்டும்.
பின் வாணலை திறந்து கொத்தமல்லி இலை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கிளறி விட வேண்டும்.
தண்ணீர் நன்றாக சுண்ட வைத்து இறக்கினால் ஆரோக்கியமான சிறுதானிய காலை உணவு தயார்.
உங்க வீட்டில் இருப்பவர்கள் இந்த சிறுதானிய உணவை சாப்பிடவில்லை என்றால் கவலை வேண்டாம், இதோ நான் சொல்லிருக்க மாதிரி சிறுதானியம் வைத்து இந்த மாதிரி காலை உணவை செய்து கொடுங்க அப்பறம் பாருங்க இது சிறுதானியத்தில் செய்தது என்பது கூட தெரியாமல் இன்னும் வேணும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.