“திராவிட இயக்க கருத்தியலுடன் பிணைந்தவர்..” மறைந்த பேராயர் எஸ்றா சற்குணம் அவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்..!!
இந்திய சுவிசேஷ திருச்சபையின் பிரதம பேராயர் எஸ்றா சற்குணம் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். இந்த துயர செய்தியை கேட்டு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் கிருஸ்தவ அமைப்பின் பிரிவினர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..
முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் :
“ஈசிஐ திருச்சபையின் பேராயரும், இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவருமான திரு. எஸ்றா சற்குணம் அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை கேட்டு நான் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்..
ஈசிஐ திருச்சபையின் பேராயரும், இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவருமான திரு. எஸ்றா சற்குணம் அவர்கள் உடல்நலக் குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
திராவிட இயக்கக் கருத்தியலுடன் பின்னிப் பிணைந்த பேராயர் எஸ்றா சற்குணம் அவர்கள். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடன் நெருக்கமான நட்பும். அன்பும் கொண்டிருந்தவர். கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளில் தலைவர் கலைஞரோடும் என்னோடும் பங்கேற்றவர். அவரது பிறந்தநாள் அன்று நடைபெறும் நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சிகளில் பங்கேற்று அவருடன் கருத்துகளைப் பரிமாறிக்கொண்ட தருணங்கள் இந்நேரத்தில் என் நெஞ்சில் நிழலாடுகிறது.
பேராயர் எஸ்றா சற்குணம் அவர்கள் மாறாத அன்போடு என்னுடனும் பழகியவர். என்னுடைய பிறந்தநாளில் மட்டுமல்லாது. மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்தும் போதும் என்னை வாழ்த்தத் தவறாதவர். பேராயர் எஸ்றா சற்குணம் அவர்கள். கிறித்தவ மக்களின் நம்பிக்கைக்குரிய வழிகாட்டியாகவும் அவர்களின் நலன் பேணும் தளகர்த்தராகவும் செயல்பட்டு வந்ததோடு, அனைத்துச் சமூக மக்களின் நன்மதிப்பையும் பெற்றவர்.
சிறுபான்மையினரின் நலன் பாதுகாக்கப்படவும், அவர்களது உரிமைகள் வென்றெடுக்கப்படவும் தம் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு வந்த பேராயர் எஸ்றா சற்குணம் அவர்களின் மறைவு. கிறித்தவப் பெருமக்களுக்கு மட்டுமின்றி. சமூகநீதியின் பால் அக்கறை கொண்ட அனைவருக்கும் நேர்ந்த பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் இசிஐ திருச்சபை நிர்வாகிகள் உறுப்பினர்களுக்கும். இந்திய சமூகநீதி இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும், குடும்பத்தினர் உறவினர் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும். ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..