கேரளா ஸ்டைல் இறால் தேங்காய்பால் கறி..!
தேவையான பொருட்கள்:
அரைக்க:
வெங்காயம் 2
இஞ்சி 1 துண்டு
தக்காளி 2
கறிவேப்பிலை சிறிது
பூண்டு 10
எலுமிச்சை அரை பழம்
மிளகு 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் 2
தேங்காய்ப்பால் கால் கப்
கிரேவி செய்ய:
இறால் அரை கிலோ
வெங்காயம் 1
தேங்காய்பால் கால் கப்
தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் அரை ஸ்பூன்
உப்பு தேவையானது
கொத்தமல்லி இலை சிறிது
செய்முறை:
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை எல்லாம் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு ஃபேனை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
பின் அதில் அரைத்த விழுது சேர்த்து உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
கெட்டியானதும் மிளகாய்த்தூள், சுத்தம் செய்த இறால் சேர்த்து அதில் தேங்காய்பால் ஊற்றி உப்பு சேர்த்து கலந்து மேலே தேங்காய் எண்ணெய் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
கிரேவி நன்றாக சுண்டி திரண்டு வந்ததும் கொத்தமல்லி இலை தூவி கிளறி இறக்க வேண்டும்.
அவ்வளவுதான் தேங்காய்பால் இறால் கறி தயார்.