ஹெல்தியான கோதுமை ரவா இட்லி..!
கோதுமை ரவா 1 கப்
உப்பு தேவையானவை
தயிர் 1 கப்
எண்ணெய் 2 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
இஞ்சி 1 துண்டு
பச்சை மிளகாய் 1 நறுக்கியது
பெருங்காயத்தூள் 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது
ஒரு வாணலில் ரவையை நன்றாக வறுத்துக் கொள்ளவும்.
ரவையை ஆறவிட்டு உப்பு,தயிர் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து 1 மணி நேரத்திற்கு ஊற விட வேண்டும்.
ஒரு வாணலில் எண்ணெய், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம் சேர்த்து பொரித்து இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து வறுக்கவும்.
வறுத்த அனைத்தையும் ஊறவைத்த ரவையுடன் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
இட்லி தட்டில் எண்ணெய் தடவி ஒரு முந்திரி வைத்து இந்த மாவில் இட்லி ஊற்றி 15 நிமிடங்களுக்கு வேகவிடவும்.
அவ்வளவுதான் ஹெல்தியான கோதுமை ரவா இட்லி தயார்.