இனி வீடு கட்டுவோருக்கு அடித்த ஜாக்பாட்..! தமிழக அரசு அசத்தல் செயல்..!
ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான தொழிலாளிகளுக்கு புத்துயிர் ஊட்டும் விதமாக பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதேசமயம், பட்டா, பத்திரப்பதிவு போன்ற விஷயங்களில் கையூட்டு பெறுவதை தவிர்க்க அதிலும் சில நடைமுறைகளை மாற்றி அறிவித்துள்ளார். இதனால் பத்திரப்பதிவு செய்வோர் லஞ்சம் கொடுக்காமல் பெற்றுக்கொள்ள முடியும்.
அதற்கு காரணம் கடந்த சில மாதங்களாவே பத்திரப்பதிவு செய்யும் அலுவலங்களில் லஞ்சம் வாங்குவது போன்ற பல்வேறு குற்றசெயல்கள் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது… இதுபற்றி முதலமைச்சர் ஸ்டாலின் கீழான தனிப்பிரிவு நடவடிக்கை மேற்கொண்டதில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
அதவாது பத்திரம் பதிவு செய்தவுடன் அவர்களுக்கு தானாகவே பட்டா பெரும் வசதியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. அதேபோல் ஒரு குறிப்பிட்ட நிலத்தை அப்படியே எந்த உட்பிரிவுகளும் இல்லாமல், எந்த சிக்கலும் இல்லாத இடம் என்றால், ஒரு நிமிடத்தில் பட்டா வழங்கப்பட உள்ளது. இந்ததிட்டம் விரைவில் அமலுக்கு வரவுள்ளது.
மேலும் தமிழகத்தில் குறிப்பிட்ட அளவு கட்டிட அளவுகளுக்கு இனி கட்டிட நிறைவு சான்றிதழ் இல்லாமல் மின் இணைப்பு வழங்கும் திட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதையடுத்து குறிப்பிட்ட சில அளவுள்ள கட்டிடங்களுக்கு இனி பணி நிறைவு சான்றிதழ் வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.
அதாவது 14 மீட்டர் (46 அடி) உயரம் மிகாமல் உள்ள 8 குடியிருப்பு அலகுகள் கொண்ட குடியிருப்பு கட்டிடங்கள், 750 சதுர மீட்டர் (8,073 சதுரடி) பரப்பளவிற்கு உட்பட்ட வீடு, 14 மீட்டர் (46 அடி) உயரம் மிகாமல் 300 சதுர மீட்டர் (3,230 சதுரடி) கட்டிட பரப்பளவிற்கு உட்பட்ட வணிக கட்டிடங்கள் மற்றும் அனைத்து தொழிற்சாலை கட்டிடங்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டங்கள் ஆகஸ்ட் மாதம் 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வரவுள்ளது.. எனவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
– லோகேஸ்வரி.வெ